சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பொங்கல் விழா !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பொங்கல் விழா !

தமிழ்நாடு அரசு சுற்றலாத் துறையின் சார்பில் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை  தனி பேருந்தில் அழைத்து  சென்றனர். திருவேடகம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் திரு .ஆர் .பெரியசாமி தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர்.

பாரம்பரிய நடைப்பயணம் சென்றனர் .வழியில் வாசலில் உள்ள கோலங்களை ரசித்துப் பார்த்தனர் .வரலாற்று சிறப்பு மிக்க திருவேடகம் சிவாலயத்தை ரசித்தனர் .படித்துறை அருகே உள்ள திடலில் அமர வைத்து அனைவருக்கும் இளநீர் வழங்கப்பட்டது. கரகம் ,சிலம்பாட்டம் ,தப்பாட்டம் ,நையாண்டி மேளம்  கிராமிய கலை நிகழ்ச்சிகள்  நடந்தது .பன்னாட்டு சுற்றுலாப் பயணிகள் மனம் மகிழ்ந்து கிராமிய ஆட்டத்தில் பங்கு பெற்று ஆடினார்கள்.y5y12 நியூயார்க்கில் இருந்து வந்த இணையர் தமிழர் உடையில் வேட்டை சேலை அணிந்து வந்தனர் .

கிராமத்தின் சார்பில் அனைவருக்கும்  சுவை  மிக்க  பொங்கலும் பாரம்பரிய தமிழ் உணவும் திருமண மண்டபத்தில் வழங்கினார்கள் .

சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள் கவிஞர் இரா .இரவி ,சிவகுமார் ,பாலமுருகன், உமாதேவி ,தட்டச்சர் நீலமேகம் ,இளநிலை உதவியாளர் பாலமுரளி, அலுவக உதவியாளர்  மாரிமுத்து ,காவலர்கள் தேவநாதன், சுந்தராம்பாள் , சுப்பிரமணி உள்ளிட்ட மதுரை சுற்றுலா அலுவலக பணியாளர்கள் அனைவரும் விழாவிற்கான வேலைகளை திறம்பட செய்து இருந்தனர் .பன்னாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மனம் திறந்து பாராட்டி நன்றி கூறி சென்றனர்

புகைப்படங்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை புகைப்படக் கலைஞர்   இனிய நண்பர் சிவகுமார் கை வண்ணத்தில் .



கருத்துகள்