ஆஸ்கார் நாயகன் நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

ஆஸ்கார் நாயகன் நீடுழி வாழ்க !      கவிஞர் இரா .இரவி !

தீலிப்குமார் என்ற இயற்பெயர் பெற்றவர் !
தீம் தரி கிட இசையால்  ஏ.ஆர் .ரகுமான் ஆனவர் !

தந்தையை இழந்த போதும் தன்னம்பிக்கை இழக்காதவர் !
தன் திறமையை வளர்த்து சாதனைகள் புரிந்தவர் !

இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வந்தவர் !
இசைக்கருவிககளை இசைக்கவும் பழகியவர் !

விளம்பரப்   படங்களுககு  இசை அமைத்தவர் !
விளம்பரப்   படங்கள் பல தயாரித்தவர் !

இளையராஜா விஸ்வநாதன் உள்ளிட்ட பலரிடம் !
இசைக்கு உதவியாளராக இருந்து பயின்றவர் !

ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் !
ரோஜா எனப் புகழ் பெற்று உச்சம் தொட்டவர் !

ரோஜா தொடங்கி ஐ வரை இசையால் சாதித்தவர் !
இராஜா இளைய  இராஜா வழியில் வென்றவர் !

ஐ என்று வியக்கும் வகையில் இசையமைத்தவர் !
ஐயமின்றி நினைத்ததை  முடித்து வென்றவர் !

பாடல் பாடி இசையமைக்கும் வல்லவர் !
பாடலால் மக்களைக் கவர்ந்த நல்லவர் !

தேசிய விருதுகள் பல பெற்றுச் சிறந்தவர் !
தேசம் தாண்டி பல நாடுகளும் விருது தந்தனர்!    

முயற்சி  திருவினையாக்கும் மெய்ப்பித்தவர் !
முயற்சியால் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்றவர் !

இசையில் சாதித்து விருதுகள் பெற்றவர் !
எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றவர் ! 

கனடா நாட்டின் தெருவிற்கு பெயர் சூட்டப்பட்டவர் !
கனடா நாட்டின்  பாராட்டுக்களை பெற்றவர் !

அமெரிக்காவின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் !
அயல் நாடுகள் பலவற்றில் பல விருதுகள் பெற்றவர் !

நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமானவர் !
நிதமும் இசையில் புதுச்சாதனைகள் நிகழ்த்துபவர் ! 

ஜனகன  உள்ளிட்ட பல தனிப் பாடல்கள் தந்தவர் !
ஜனங்களின் இரசனைக்கு ஏற்ப பாடல் இசைத்தவர் !

வந்தே மாத்திரம் பாடல் இசையமைத்தவர் !
வையகம்  முழுமையும் அறியப்பட்டவர் !

அண்டை  மலையாளம் இந்திக்கும் இசையமைத்தவர் !
ஆங்கிலம் சீனம் மொழிகளுக்கும் இசையமைத்தவர் !

பார் புகழும் பாடல்கள் இசையமைத்து சாதித்தவர் !
பத்ம பூசண் விருது பெற்று பெருமை சேர்த்தவர் !

தமிழக அரசின் விருதுகள்  பல பெற்றவர் !
தமிழரின் திறமையை உலகிற்குப் பறை சாற்றியவர் !

கோல்டன் குலோப் என்ற உயர்ந்த விருது பெற்றவர் !
கொடி கட்டி  இசையால் நாளும் பறப்பவர் !

அகிலம் போற்றும் இசையினை என்றும் தொடர்க !
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க !

கருத்துகள்