புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா!

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா!

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியக குடிலில் பொங்கல் விழா நடந்தது .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் சிறப்புரையாற்றினார் .தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் சிறப்புரை சிறப்பாக இருந்தது .மாடு என்றால் பக்கம் என்று பொருள் .தலை மாடு ,கால் மாடு என்றால்தலைக்கு பக்கம் கால் மாடு என்றால் காலுக்கு பக்கம் என்று பொருள் அன்று மனிதன் வாழும் வீட்டுக்கு பக்கமாக மாடு வளர்த்தான் .பக்கமாக இருப்பதால் மாடு என்றான். மாடு பால் ,தயிர் ,மோர் ,வெண்ணை ,நெய் இவற்றை தந்தது .மாடு என்றால் செல்வம் என்று பொருள் உண்டு .மாட்டு தொழுவம் என்றான் .மாட்டை தொழுதான் . வணங்கினான் .இப்படி பல தகவல்கள் தந்தார் .மணியம்மை தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர் புரட்சிக் கவிஞர் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் .








கருத்துகள்