படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி!

படித்ததில் பிடித்தது !  கவிஞர் இரா .இரவி!



பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய கவிஞருக்கு
பொங்கல் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

கவிதை உறவு புதிய இதழை இன்று பெற்று முதல் பக்கம் தொடங்கி, என் பக்கம் வரை படித்து முடித்த மகிழ்விலும் நிறைவிலும் இம்மடல் எழுதுகிறேன். அருமையான கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் அமுதா பாலகிருஷ்ணனின் கவிதையும் அட்டைப்படத்தில் தாங்கள் வெளியிட்டுள்ள தருண் விஜய் படமும் மிகப் பொருத்தமானவை. திருக்குறள் பரப்பும் தொண்டராக டெல்லியைச் சேர்ந்த ஓர் எம்.பி. செயல்படுவது வியப்பை அளிக்கிறது. திருக்குறள் பெருமையையும் நமக்கு நினைவூட்டுகிறது. இவ்விதழில் வழக்கத்தை மீறி நிறைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நண்பர் இரா. மோகன் எழுதியுள்ள 'நன் மனைவி உடையார் எல்லாம் உடையார்' என்ற கட்டுரை மிகக் கவனத்துடன் சிறப்பாக எழுதப்பெற்றுள்ளது. என் பாராட்டை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். தாங்கள் அறிவித்துள்ள ஒரு நாள் கருத்தரங்கம் மிக நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நிறைவாக முகம் ஒரு மலர்த்தோட்டம் என்று தாங்கள் எழுதியுள்ள கடைசிப்பக்கம் அருமை. மொத்தத்தில் இந்த இதழ் எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்குகிறது. பாராட்டுகள்.

என்றும் அன்புடன்
க.ப. அறவாணன்

பெறுநர்:
திருமிகு ஏர்வாடி இராதாகிருஷ்ணன்

கருத்துகள்