பல்லின மக்களோடு லண்டன் ஹறோவில் சிறப்புற நடந்த தைப்பொங்கல்

பல்லின மக்களோடு லண்டன் ஹறோவில் சிறப்புற நடந்த தைப்பொங்கல் உழவர் விழா
நேற்று முன்தினம் லண்டன் ஹறோ பகுதியில் ஹறோ தமிழ் கொமினிட்டி அமைப்பினால் நடாத்தப்பட்ட உழவர் திருநாள் தைப்பொங்கல் விழாவில் பல்லின மக்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
ஹறோ கவுன்சில் தலைவர், மற்றும் பலர் உரையாற்ற, பொன்னாடைகள் போர்த்தி அவர்கள் கெளரவிக்கப்பட்டு, சில பெண்மணிகள் செம்மொழி பாடலுக்கு நடனமாடி இந்நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர்.
மேலும், நடனங்கள், பாட்டு என பற்பல நிகழ்வுகளை வழங்கி பல்லின மக்களும் ரசிக்கும்படியாக சிறப்புற இத் தைப்பொங்கல் விழா இனிதே நிறைவுபெற்றுள்ளது.





கருத்துகள்