நண்பர்கள் கவனத்திற்கு !கவிஞர் இரா .இரவி !

 நண்பர்கள் கவனத்திற்கு !கவிஞர் இரா .இரவி !

தினமலரில் வெளியான ஆத்திசூடியில் தன்னம்பிக்கை கட்டுரை படித்து விட்டு இராஜபாளையத்திலிருந்து திரு .காளியப்பன் பேசியது .
".நான் பள்ளி சென்று ஒன்றாம் வகுப்பு மட்டுமே படித்தேன் .நூல்கள் விற்பனை கடை நடத்துவதால் படிப்பில் ஆர்வம் வந்து படித்து வருகிறேன்.
தங்கள் கட்டுரை படித்தேன் மிக நன்று.ஒரு ஆசிரியர் கேட்டார் என்று 100ஆத்திசூடி நூல்கள் வாங்கி வைத்தேன் .அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார் .ஒன்று கூட இன்னும் விற்கவில்லை .உங்கள் கட்டுரை படித்தவர்கள் இனி வாங்குவார்கள் என்று நம்புகிறேன் .இரண்டு மணி நேரம் ஓடும் பிடித்த நடிகரின் திரைப்படத்திற்குரூபாய் 400 கொடுத்து வாங்கி படம் பார்க்கும் சமுதாயம் .வாழ்க்கை முழுவதற்கும் பயன் தரும் ஆத்திசூடி நூலை 25 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை என்பது வருத்தம் என்றார் ."
நான் எனக்கு 10 நூல் விலைக்கு அனுப்ப சொல்லி விட்டேன் .இராஜபாளையத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் நூல் வாங்கி அவரை ஊக்கப்படுத்துங்கள் .நன்றி 

அவர் முகவரி .

M.P. காளியப்பன்
குருஅருள் புத்தக நிலையம்
105/33 அம்பலப்புளி பஜார்
முருகன் கோவில் அருகில்
நகைக்கடை பஜார்
இராஜபாளையம் .626117.
அலைபேசி 9894436520.

கருத்துகள்

கருத்துரையிடுக