பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு!

பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு!
தமிழ்நாடுஅரசு சுற்றுலாத்துறை நிதி உதவியுடன் மதுரையில் சுற்றுலாத் துறையும் , தொழில் முனைவோர் ( CED) அமைப்பும் இணைந்து பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது .( CED)செயலர், முனைவர் ஜெயராமன் வரவேற்றார் .மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர்
இல .சுப்ரமணியன் தலைமை வகித்தார் .மீனாட்சியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் நடராசன் முன்னிலை வகித்தார். கூடுதல் தலைமைச் செயலர் ,சுற்றுலா ,கலைப் பண்பாடு ,இந்து அறநிலைத்துறை செயலர் முனைவர் கண்ணன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .சுற்றுலா அலுவலர் க .தருமராஜ் நன்றி கூறினார்.
தொல்லியல் அறிஞர்களும் ,பேராசிரியர்களும் கருத்துரை வழங்கினார்கள் .விழாவிற்கான ஏற்பாட்டை அமைப்பின் பணியாளர்களும் சுற்றுலா அலுவலர் க .தருமராஜ் அவர்கள் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள் கவிஞர் இரா .இரவி, பாலமுருகன் ,உமாதேவி ,இளநிலை உதவியாளர் பாலமுரளி, அலுவலக உதவியாளர் மாரிமுத்து ,ஓட்டுனர் ஆசைத்தம்பி ஆகியோர் செய்து இருந்தனர்
மதுரையில் உள்ள ட்ராவல் கிளப் பொறுப்பாளர்கள் ,முன்னணி வழிகாட்டிகள் ,கல்லூரி பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர் ,கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ,கிராம மக்கள் இப்படி பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்

கருத்துகள்