"இரண்டாம் பென்னிகுக் " மதுரையில் சுவரொட்டி ! கவிஞர் இரா .இரவி !

"இரண்டாம் பென்னிகுக் " மதுரையில் சுவரொட்டி !
கவிஞர் இரா .இரவி !

நடிகர் திரு .ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் சுவரொட்டி ஒட்டி உள்ளனர் .அதில் திரு .ரஜினி காந்த்தை "இரண்டாம் பென்னிகுக் " என்று குறிப்பிட்டுள்ளனர் .நடிகர் திரு .ரஜினி காந்த் இதனை விரும்ப மாட்டார் என்றே கருதுகின்றேன் .மாமனிதர் பென்னிகுக் சொந்த நாட்டில் இருந்த தன் சொந்த சொத்துக்களை விற்று அந்நிய நாட்டு மக்களுக்காக அணை கட்டியவர் .விவசாய மக்களின் வாழ்வாதாரம் வளர்த்தவர் .ஈடு இணையற்றவர். தன்னலமற்ற மாமனிதர், இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனி வரும் உலகம் நம்ப மறுக்கும் அளவிற்கு வாழ்ந்திட்டவர் . வாழ்வாங்கு வாழ்ந்தவர் .உடலால் மறைந்தாலும் மக்கள் உள்ளங்களில் என்றும் வாழ்பவர் . பென்னிகுக்கோடு தயவுசெய்து வேறு யாரையும் ஒப்பிடாதீர்கள் . திரு .ரஜினி காந்த் அவர்கள் அவரது ரசிகர்களுக்கு இதுபோன்ற சுவரொட்டி இனி அச்சிட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டுகிறேன்

கருத்துகள்