மதுரை கம்பன் கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது ! கவிஞர் இரா .இரவி !
மதுரை கம்பன் கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது . 14.12.2014 காலையில் ,சங்க இலக்கிய பாடல்களில் அவ்வை பாடிய அகம் பற்றி . தா .கு .சுப்ரமணியன் அவர்களும் பேராசிரியர் இராசாராம் அவர்கள் சங்க இலக்கிய பாடல்களில் அவ்வை பாடிய புறம் பற்றி பேசினார்கள் .
பாரதிபாஸ்கர் அவர்களை நடுவராகக் கொண்டு பாரதி பாடல்களால் மக்களால் மதிக்கப்படுவது பாஞ்சாலியா ? கண்ணம்மாவா ?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது .
மாலையில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது .அருட்செல்வர் சங்கர சீதாராமன் உள்ளிட்ட புரவலர்கள் கலந்து கொண்டனர் .
கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள் இசையரங்கம் முடியும் நேரம் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்த தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நீங்கள் பேசுவதை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் .பேசுவதை நேரடியாக பார்க்க வேண்டும் வாழ்ந்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். .உடன் அவர்கள வாழ்த்துரை வழங்கினார். அனைவரையும் தன் வேறு உலகத்திற்க்கே அழைத்துச் சென்றார் என்றார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி ,வாழிய செந்தமிழ் பாடி முடித்தார்கள் .அனைவரும் எழுந்து நின்று கரஒலி தந்து பாராட்டினார்கள் .. பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழ் ப்பாடல்களாக இருந்ததால் அனைவரும் பொருள் புரிந்து ரசித்தனர் .
மிருதங்கம் திருவாரூர் திரு. வைத்தியநாதன் மிக அருமையாக வாசித்து கர ஒலி பெற்றார்கள் .
கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
மகிழ்ச்சி நண்பரே
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஅன்புடன்
கவிஞர் இரா .இரவி