பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
யானையை இலக்காக்கு
முயலாவது கிட்டும்
முயன்றால் யானையும் கிட்டும் !
மரமோ கிளையோ இலையோ
கிளியோ தெரியாது கண்
மட்டுமே தெரியும் !
பயணம் தொடங்கும்முன்
இலக்கை முடிவு செய்
இனிதாகும் பயணம் !
பெரிதினும் பெரிதாக வை
வேண்டாம் கஞ்சத்தனம்
இலக்கு நிர்ணயிப்பதில் !
வாழ்க்கைக்கு
வழி காட்டும் விளக்கு
இலக்கு !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக