மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி !

மாற்றுத்திறனாளிகள் !  கவிஞர் இரா .இரவி ! 

அங்கத்தில் குறை இருந்தாலும் 
அகத்தில் குறை இல்லாதவர்கள் !

உடலில் குறை இருந்தாலும் 
உள்ளத்தில் குறை இல்லாதவர்கள் !

நடக்க முடியாவிட்டாலும் சோராதவர்கள்
பேச  முடியாவிட்டாலும்  பேதலிக்காதவர்கள் !

பார்க்க முடியாவிட்டாலும் அசராதவர்கள்
கேட்க  முடியாவிட்டாலும் வருந்தாதவர்கள் !

கைகள் இல்லாவிட்டாலும் கலங்காதவர்கள் 
குறைகள் கண்டு கரையாதவர்கள் !

நான்கு சுவருக்குள் சுருங்காதவர்கள்
நான்கு திசைகளும் செல்வர்கள் !  

இல்லாததற்காக  என்றும் வருந்தாதவர்கள் 
இருப்பதை செம்மையாக்கும் திறனாளர்கள் !

வாய்ப்புகள் வழங்கினால் ஒளிர்வார்கள் 
வசதிகள் ஏற்படுத்தினால் வளர்வார்கள் !

குறையையும் நிறையாக எண்ணுபவர்கள் 
குறைக்காக என்றும்  வருந்தாதவர்கள் !

பரிசுகளும் பதக்கங்களும்  பெறுபவர்கள் 
பலரின் பாராட்டுக்கு உரியவர்கள்  !

எக்குறையும் இல்லாதோர் சிலர் 
எவ்வேலையும் செய்யாமல் உளர்  !

உடற்குறை இருந்தபோதும் பலர் 
ஓடி ஓடி உழைப்போர் உளர்  !

கருத்துகள்