கொடியது மது ! கவிஞர் இரா .இரவி !

கொடியது  மது !                 கவிஞர் இரா .இரவி !

கொண்டாட்டம் என்று தொடங்கி
திண்டாட்டத்தில் முடிக்கும்  
மது !

போதையைத் தந்து நல்ல 
பாதையை மாற்றும் 
மது !

வீழ்த்திட விரிக்கும் வலை 
வீழ்ந்ததும் மனக்கவலை 
மது !

அடிமை ஆக்கிடும் 
உடைமை இழக்க நேரிடும் 
மது !

எப்படியும் வேண்டும் 
என்று கேட்க வைத்திடும் 
மது !

மானம் போகும் 
அவமானம் வரும் 
மது !

மயங்கி விழுவாய் 
சாலையில் குப்பையில் 
மது !

விசத்தில் இல்லை 
உயர்ந்தது  தாழ்ந்தது 
மது !

இன்று  மட்டும் என்பாய்
என்றும் தொடர நேரும் 
மது !

நண்பனோடு குடிப்பாய் 
நட்பை முறிப்பாய்
மது !

ஒழுக்கக் கேட்டை 
உற்பத்தி செய்யும் 
மது !

ஆறு அறிவிலிருந்து அய்ந்துக்கு 
இடமாற்றம் செய்யும் 
மது !

குற்றங்களின் காரணி 
குற்றவாளிகளின் விருப்பம் நீ 
மது !

பகுத்தறிவை அழிக்கும்
பாசத்தை ஒழிக்கும் 
மது ! 

கால்கள் மட்டுமல்ல 
புத்தியும் தடுமாறும் 
மது !

தொட்டால் பற்றிக் கொள்ளும் 
தொல்லைதரும் மின்சாரம் 
மது !

மதிப்பும்  மரியாதையும் 
இழக்க வைக்கும் 
மது !

ஆற்றலை அழித்துவிடும் 
ஆனந்தம் ஒழித்துவிடும் 
மது !

குடும்பத்தில் சிக்கல் 
கவலையால் சிக்கல் 
மது ! 

மனிதநேயம் அகற்றும் 
மனிதவிலங்காய் மாற்றும் 
மது ! 

உயிர் குடிக்கும் திரவம் 
நஞ்சு மிக்க அரவம் 
மது ! 

ஆண்மை குறைக்கும் 
மேன்மை சிதைக்கும் 
மது ! 

தொடாமலிருந்தால்
தொழுவார்கள் உன்னை 
மது !  

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக