ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
வாழ்வாங்கு வாழ்ந்தால் 
வரலாற்றில் இடமுண்டு 
நாயுக்கும் !

தேய்பிறையாய் பண்பாடு 
வளர்பிறையாய் சீரழிவு 
நவீனயுகம் !

காரணியானது 
கோழி விலை குறைவுக்கு 
பறவை காய்ச்சல் !

வேண்டும் கவனம் 
வேண்டாம் கவனக்குறைவு 
குழந்தையின் காய்ச்சல் !

முதலில் பிறந்தது 
முக்காலமும் நிலைத்தது
தமிழ் !

பலரும் தொடங்கி விட்டார்கள் 
பாரதத்தில் வங்கி கணக்கு 
இருப்பு ?

வீட்டுச்சொத்து நாட்டுக்கு அன்று 
நாட்டுச்சொத்து வீட்டுக்கு இன்று 
அரசியல்வாதிகள் !     

பஞ்சமில்லை 
ஏமாளித் தொண்டனுக்கும் 
ஏமாற்றும் தலைவனுக்கும் !

ரசிப்பது தவறல்ல 
பறிப்பது தவறு 
மலர்கள் !

தலையில் இருப்பதை விட 
இலையில் இருப்பதே அழகு 
பூக்கள் !

பக்தர்களிடம் கோடிகள் சுருட்டி 
ஆசை ஒழிக்க  அருளுரை 
சாமியார் !

பயன்படுத்துக 
பயன்படுத்திடத்தான்
பகுத்தறிவு !

ஏன் ? எதற்கு ? எப்படி ?
எற்று கேட்டால் 
கிடைக்கும் விடைகள் !

அன்பே சிவம் 
சிவன் கரங்களில் 
சூலாயுதம் ?

பண்படுத்த என்றனர் 
புண்படுத்துகின்றனர்   
மதவாதிகள் !

இரக்கம் காட்டுங்கள் 
எரிந்து விழாதீர்கள் 
மன நோயாளிகளிடம் !

கிருமிகளால் வருவன  கொஞ்சம் 
கவலைகளால்  வருவன  அதிகம் 
நோய்கள் !

உண்பது சைவம் மட்டும் 
உணவாகிறது அசைவர்களுக்கு 
ஆடு !

பலருக்கும்  தெரியவில்லை 
வேறுபாடு
அன்பிற்கும் வெறிக்கும் !

கருத்துகள்