இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !

இரண்டு கால் மிருகங்கள் !        கவிஞர் இரா .இரவி !

மலரும் மொட்டுகளைக் கருக்கிய மூடர்கள் !
மதம் என்ற பெயரில் உயிர் குடிக்கும் கழுகுகள் !

வன்முறை எந்த மதமும் போதிக்கவில்லையடா !
வன்முறை போதித்தால் அது மதமே இல்லையடா !

காட்டுமிராண்டிகள் கூட மனிதர்களைக் கொல்வதில்லை !
காட்டுமிராண்டிகளுக்கும்  கேடான கொடியவர் நீங்கள் !

பழிக்குப் பழி வாங்கிட பிஞ்சுகளையா கொல்வது ?  
பட்டாம் பூச்சிகளைச் சுட்டிட எப்படியடா மனம் வந்தது ?

இராணுவத்தோடு மோதி இருந்தால்  வீரம் !
இராணுவத்தினர் குழந்தைகளோடு மோதியது சோரம்  ! 

பகுத்தறிவைப் பயன்படுத்தாத மனித விலங்குகளே !
பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற கொடூரன்களே  ! 

இறந்த உயிர்களில் ஒரு உயிராவது திருப்பித் தர முடியுமா ?
ஏனடா ? இந்த முட்டாள்தனம் திருந்துங்கள் !

அன்பு செலுத்துவதைத்தான் மதங்கள் கூறுகின்றன !
அன்பு அறியாத மடையர்கள் மத வெறியர்கள் !         
.
சிட்டுக்குருவிகளைத் துப்பாக்கியால் துளைப்பதா வீரம் ?
சின்னப்புத்திகாரர்களின்  சின்னத்தனம் கோழைத்தனம் !

வாழ வேண்டிய வயதில் சிறார்களைச் சிதைத்தனர் !
வாழத் தகுதியற்ற இரண்டு கால் மிருங்கங்கள் !     

இரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தோற்றன !
மதவெறி பிடித்த வெறி நாய்கள் ஆகின !

விலைமதிப்பற்றது மனித உயிர்கள் என்பதை !
வீணர்கள் உணரவில்லை விவேகமில்லாதவர்கள் !

கொன்று முடித்தபின் கொன்றோம் என்கிறீர்கள் !
கொல்லும்முன் சொன்னால் கொன்று  இருப்பார்கள் !

மதம் அபின் என்றார் லெனின் அன்று !
மதம் அபினை விட கொடிய போதையானது இன்று !

மூளைச்சலவையால் மூளை இழக்கும் முட்டாள்கள் !
முழுமையாக சிந்தித்தால் மூடத்தனம்  முற்றுப்பெறும்  !

தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருளாம் !
தாலிபான் என்றால் மடையர்கள் என்று பொருளானது !

மனிதகுல வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம் !
மதங்களையே தடைசெய்ய மறு பரிசீலனை செய்யுங்கள் ! 

மதத்தால் வந்த நன்மை விட தீமையே அதிகம் !
மதத்தால் உலக அமைதியே கேள்விக்குறியானது !

தீவிரவாதத்திற்கு தீ வைப்போம் நாம் !
தீவிரமாக எதிர்ப்போம்   தீவிரவாதத்தை !

உலகிலிருந்து வேரறுப்போம் தீவிரவாதத்தை !
உலகிற்கு உணர்த்துவோம் மனித நேயத்தை !

உலகம் மனிதர்கள் யாவரும்   ஓர் குலம் !
உரைத்தவன் தமிழன் உடன் உணருங்கள் !
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்