கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதற்காக கவிஞர் இரா .இரவி பாராட்டை தெரிவித்தார் .
கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதற்காக கவிஞர் இரா .இரவி பாராட்டை தெரிவித்தார் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
14.12.2014 அன்று மதுரையில் கம்பன் கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது . கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்களின் இசையரங்கம் நடந்தது .இரவு 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் பாடல்களால் பார்வையாளர்களை மெய் மறக்க வைத்து ஒருவர் கூட எழுந்து போகாத வண்ணம் ரசித்து கேட்டனர் .முழுவதும் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியது தனிச் சிறப்பு .மகாகவி பாரதியின் பல பாடல்கள் பாடினார்கள் .பாலும் தெளி தேனும் என்று தொடங்கி ,சில பக்திப்பாடல்களும் ,காணி நிலம் வேண்டும் ,காற்றினிலே வரும் கீதம் ,சின்ன சிறு கிளியே கண்ணம்மா ,எத்தனை கோடி இன்பம் வைத்தாய் , திராத விளையாட்டுப் பிள்ளை ,உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ,யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி ,வாழிய செந்தமிழ் பாடி முடித்தார்கள் .அனைவரும் எழுந்து நின்று கரஒலி தந்து பாராட்டினார்கள் .. பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழ் ப்பாடல்களாக இருந்ததால் அனைவரும் பொருள் புரிந்து ரசித்தனர் .
நிகழ்ச்சி முடிந்தததும் ,கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதற்காக கவிஞர் இரா .இரவி பாராட்டை தெரிவித்தார் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக