பிரபல ஓவியர் Ravi Palette ஓவியத்திற்கு
கவிஞர் இரா .இரவி கவிதை
--
தவம் செய்த முனிவரின்
தலையும் கொய்யப்பட்டது !
அடர்ந்த மரங்கள்
அனைத்தும் வெட்டப்பட்டது !
மலைகளை வெட்டி எடுத்து
மழை நாட்டுக்கு அனுப்பப்பட்டது !
மணல்களை அள்ளி எடுத்து
மலை நாட்டுக்கு அனுப்பப்பட்டது !
வெப்பமயத்தால் வெண்பனிப்
பாறைகள் உருகி விட்டது !
கண்களை விற்று
ஓவியம் வாங்கப்பட்டது !
.
கருத்துகள்
கருத்துரையிடுக