மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் ! கவிஞர் இரா .இரவி !

மாவீரன்  பிரபாகரன் பிறந்த நாள் !       கவிஞர் இரா .இரவி !

மாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ 
மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ !

நீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும் 
நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன !

நீ யானை மாதிரி ஆம் இருந்தாலும் 
இறந்திருந்தாலும்  மதிப்பு மிக்கவன் நீ !

நீ இன்னும் இருக்கிறாய் ! என்று 
நாளும் அச்சத்தில் சாகிறான்  பகைவன் !  

நீ இன்னும் வாழ்கிறாய் ! என்று 
நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் !

சிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய்
சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை !

கடவுளை நம்பாத நாத்திகர்களும் 
கனிவோடு  உன்னை நம்புகின்றோம் !

புழுவாக இருந்த இலங்கைத் தமிழனை 
புலியாக மாற்றிய மாவீரன் நீ !

கொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு   
திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ !

புறநானூற்று  வீரத்தை படித்தோம் 
புதிய  வடிவில் ஈழத்தில் பார்த்தோம் !

எட்டு நாட்டுப் படைகளோடு வீர 
எட்டு வைத்து போராடியவன் நீ !

துரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை 
துரோகம்தான்  உன்னிடம் தோற்றது !

இருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும்
இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று  !

உலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய் 
உலகம் முழுவதும் சாட்சிகள் உண்டு !

பகைவர்கள் துரோகிகள் மனசாட்சி  இன்றும் 
பயத்தோடு உன் வீரம் பாராட்டும் !  

தனித்தமிழ் ஈழம் விரைவில்  மலர்வது உறுதி  
பிரபாகரன் தேசம் பெயர் சூட்டுவதும் உறுதி  !

புரட்சியாளர்களுக்கு பிறந்த நாள் உண்டு 
புனிதர்களுக்கு இறந்த  நாள் இல்லை !

கருத்துகள்