பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !


தம்பி உடையான் 
படைக்கு அஞ்சினான் 
எதிரணியில்   தம்பி !

நாற்பது வயதிற்கு  மேல் 
நாய் குணம் ஆம் 
நன்றி குணம் !

தனி மரம் தோப்பானது
தனி மரத்தின் 
விதைகளால் !

மாமியார் மருமகள் சண்டை 
கண்ணிற்கு இன்பம் 
தொலைக்காட்சி !

நாய் வேடமிட்டு  குரைத்தாலும் 
தெரிந்திடும் வேறுபாடு 
குரைப்பது கடினம் !

தீமைக்கும் 
நன்மை செய் 
திருக்குறள் !

முக்கடல் சங்கமத்தில் 
முப்பால் வடித்தவர் 
திருவள்ளுவர் !

நண்டு கொழுத்தால் 
வளையில் இராது 
சாமியார் கைது !  
 

திரைகடல் ஓடி 
திரவியம் தேடினால் 
சுடுகிறான் சிங்களன் !

செருப்பால் அடித்து விட்டு 
வெல்லம் தந்தார் 
இலங்கை அதிபர் !

தான் பிடித்த முயலுக்கு 
மூன்றே கால் 
இலங்கை !

தீமையைப் பார்ப்பதை  விட  
பார்வையற்று இருப்பது மேல் 
நீதி தேவதை !

நிழலின் அருமை 
வெயிலில் தெரியும் 
அப்பா மறைவு !

நிறைகுடம் 
தளும்பாது   
பண்பாளர் !

நிர்வாண நாட்டில் 
ஆடை அணிந்தவன் 
அறிவாளி !

தண்ணிரில் உள்ளது 
வாழ்வு 
மீன் !

நெருப்பில்லாமல்
வந்தது  புகை 
பனி மூட்டம் !

நொறுங்க உண்டால்  ஆயுசு நூறு 
நொறுக்குத்தீனி  உண்டால்  
குறையும் ஆயுசு !

கொடுத்தால் கிடைக்கும் 
கொடுக்காமல்  கிடைக்காது 
மரியாதை !

நிரந்தரம் 
வெண்மை 
சங்கு !

அலை ஓய்ந்தபின்  
நீராட விரும்பினால் 
முடியாது நீராட !

சாட்டை இல்லாமலும் 
பம்பரம் சுற்றும் 
கையால் சுழற்றினால் !


செருப்புக் கடித்தால் 
திருப்பிக் கடிப்பதில்லை 
இரவுடிக் கூச்சல்  !

கொள்ளிக் கட்டையால் 
தலையைச் சொரிதல் 
பன்னாட்டு நிறுவன அனுமதி !

சேரச்சேர 
பணஆசை 
அரசியல்வாதிக்கு !


குறை குடம் 
கூத்தாடும் 
அரசியல்வாதி !

அரசியல் கூத்தில் 
கோமாளிகள் 
அரசியல்வாதிகள் !

கோழி கூவி பொழுது விடியாது 
அரசியல்வாதிகளால் 
வராது  விடியல் !

சலுகையுள்ள மாடு 
படுகையெல்லாம் மேயும் 
அமைச்சர் உறவினர்  !

சிங்கம் பசிக்கு யானையையும் கொல்லும் 
அரசியல்வாதி  பசிக்கு 
உண்மையையும் கொள்வர் !


கருத்துகள்