தகவல் ! கவிஞர் இரா .இரவி !

தகவல் ! கவிஞர் இரா .இரவி !
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 வாயில்கள் உள்ளன .நான்கு சித்திரை வீதிகளிலும் வாயில் உள்ளது .கிழக்குச் சித்திரை வீதியில் மட்டும் இரண்டு வாயில்களும் மற்ற வீதிகளில் ஒரு வாயில் உள்ளன . 5 வழிகளிலும் உள்ளே போகலாம் , வெளியே வரலாம். இது தெரியாத வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் நிற்கும் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வாயிலில் மட்டும் குவிந்து வருகின்றனர் .மற்ற வாயில்களில் கூட்டம் இல்லை .இனி செல்பவர்கள் மற்ற வாயில்களிலும் செல்லலாம் .

கருத்துகள்