குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா !
கவிஞர் இரா .இரவி !
கவிஞர் இரா .இரவி !
வள்ளியப்பா இலக்கிய வட்டம் இராயவரம் மு .அ.மு .சுப .பழனியப்ப செட்டியார் இலக்கிய வட்டம் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா மதுரை அருகே மேலூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேசுவரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக நடைபெற்றது .கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,முனைவர் தாமோதரக் கண்ணன் ,புதுவை பாரதி ஆசிரியர் ஓவியர் பாரதி வாணர் சிவா ,மேலூர் கவிஞர் வாசுகி ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் திரு .கிருஷ்ண மூர்த்தி , மேலூர் ஆசிரியர் சு . அழகன் புலவர் சோமன் ,ஆசிரியர் பிலிக்ஸ் ,கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மீனாட்சி பதிப்பகம் ,மணிவாசகர் பதிப்பகம் சார்பாகவும் வந்து இருந்தனர்.
குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள். குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா அவர்களின் பாடல்களுக்கு மாடு ,குதிரை ,அணில் என மாறுவேடமிட்டு மாணவ மாணவியர் நடமாடினார்கள் .ஏராளமான குழந்தைகள் விழாவில் பங்குபெற்றனர் .
அனைவருக்கும் சுவையான மதிய விருந்து வழங்கினர் .பள்ளியிலும் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் அவர்கள் இல்லத்திலும் விருந்து நடந்தது .திரு .வேலாயுதம் அவர்கள் அருகில் நின்று அனைவருக்கும் அன்போடு பரிமாறினார்கள் .சென்னை ,புதுவை ,திருச்சி உள்பட பல ஊர்களில் இருந்து குழந்தை இலக்கிய படைப்பாளிகள் வந்து இருந்தனர் .நாள் முழுவதும் குழந்தைகளின் இனிமையோடு கழிந்தது .
கவிஞர் இரா .இரவி ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா.
கவிஞர் இரா .இரவி முனைவர், கவிஞர் தாமோதரக் கண்ணன்
முனைவர், கவிஞர் தாமோதரக் கண்ணன் , பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,கவிஞர் இரா .இரவி
மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக