பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி !
சிக்கி முக்கி கற்களை
உரசினால்தான் தீ வரும் !
கள்ளி அவள்
கண்களால் பார்த்தாலே
தீ வரும் !
இமைகள் கூட
இமைக்க மறக்கின்றன
அவளைக் கண்டால் !
அவள் விழிகளிலிருந்து
வரும் விசைகளால்
ஆட்டம் காண்கிறது
மனசு !
இதழ்கள் அசைத்து
எதுவும் பேசவில்லை
எல்லாம் பேசிவிட்டாள்
விழிகளால் !
வேறு எங்கும்
நான் கண்டதில்லை
கரு விழிகள் நடனம் !
நோக்கும்போது
நோகவில்லை
நோக்காதபோது
நொந்து போனேன் !
பாவையின் பார்வை
பரவசத்தில்
நேரம் கடப்பதை
உணரவில்லை !
மேனி தீண்டல்
தேவையில்லை
பார்வை சீண்டல் போதும் !
உற்றுப்பார்ததில்
ஊட்டசத்தை
உணர்ந்தேன் !
விழி வழி
இன்பரசம்
அனுப்பும் கள்ளி
.
இமைக்காமல் பார்க்கும்
போட்டியில்
வெற்றி அவளுக்கு
வசமானது !
நான் தோற்றபோதும்
மகிழ்ச்சி எனக்கு !
ஆயிரம் பேரோடு
நான் இருந்தாலும்
அழகாக காண்கிறாள்
அழகி !
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்
பார்வையால் துரத்திப்
பிடித்து விடுகிறாள் !
கருத்துகள்
கருத்துரையிடுக