அன்று விடியும் மங்கையர் வாழ்வு ! கவிஞர் இரா .இரவி !

அன்று விடியும் மங்கையர் வாழ்வு ! கவிஞர் இரா .இரவி !
வழி மேல் விழிகள் வைத்து
வாசலில் காத்து இருக்கிறாள்
தலைவி !
வழியில் தரையில் போதையில்
வீழ்ந்து கிடக்கிறான்
தலைவன் !
இவள் மட்டுமல்ல
இவள் போல ஏராளம் மங்கை
கவலையில் !
என்று மடியும் இந்த
மது போதை மோகம்
குடிமகனுக்கு !
மதுக்கடைகள் மூடினால்
அன்று விடியும்
மங்கையர் வாழ்வு !
எங்கும் கிடைக்கவில்லை
எனில் எப்படி குடிப்பார்கள் ?

கருத்துகள்