சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
மரணதண்டனைக்கு ஆதரவு
ஐ.நா .மன்றத்தில்
காந்தி தேசம் !

சில்லரை விற்பனை மட்டுமல்ல
மொத்தமும் தடை செய்க
சிகரெட் ( வெண்சுருட்டு ) !

அண்ணன் வேகம்
தம்பிக்கு இல்லை
கடிகார முட்கள் !

யாருக்கும் தெரியாது
எப்போது வெடிக்கும்
எரிமலை !

விருப்ப ஒய்வு
பெற்றார் அப்பா
மகளுக்குத் திருமணம் !

அதிகம் படித்தவர் அதிகாரத்தில்
அதிகம் படிக்காதவர் எடுபிடி
அலுவலகம் !

அறிக்கைகளில் நேர விரையம்
பொது நலம் பேண நேரமின்மை
அரசியல் !

கருத்துகள்