தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் இலக்கிய கொடை உள்ளம் ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின்  இலக்கிய கொடை உள்ளம் !     கவிஞர் இரா .இரவி !
 

நூலகங்களில் பட்டிமன்றம் பேசுவதற்கு செல்லும்போதெல்லாம்  ஆய்விற்கு பயன்படுத்திய நூல்களையும் , இருவரும் எழுதிய புதிய நூல்களையும் நூலகங்களுக்கு  நன்கொடையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள் .புதுக்கோட்டை நூலகத்திற்கு வழங்கினார்கள் .மதுரை காந்தி அருங்காட்சியக  நூலகத்திற்கு வழங்கினார்கள் .

நேற்று  (23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு  தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர்  திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

தொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .

திருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை  பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார் .நூலகத்தின் வெளியே பெரிய மேடையிட்டு இருக்கைகள் வைத்து மிகச் சிறப்பாக நடந்தது .திருநகர் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கருத்துகள்