மதுரை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் திரு .ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி !

மதுரை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் 
திரு .ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி !

நேர்மையான அதிகாரி முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . அவர்கள் சுற்றுலாத் துறை செயலராக  இருந்த போது மதுரை மீனாட்சியம்மன்   கோவில் புதுப்பிக்கவும் .சுற்றியுள்ள நான்கு சித்திரை விதிகளிலும் நல்ல கற்களால் தளம் போடப்பட்டு , சிறக்க நிதி உதவி வழங்கினார்கள்.நான்கு சக்கர ,இரண்டு சக்கர வாகனகள் செல்வது தடுக்கப்பட்டு  மீனாட்சியம்மன்   கோவில் வரும்சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி மதுரை வாழ் மக்கள் ஏராளமானோர் தினமும் காலையும் ,மாலையும் நடைப் பயிற்சி செய்யவும் பயன்பட்டு வருகின்றது .

தினமும்  காலையில் சித்திரை வீதிகளில்   நான்  நடைப் பயிற்சி செல்வது வழக்கம் . வடக்கு சித்திரை வீதியில்  பாதாள சாக்கடை  தூர் வாரிய மண் குவித்து வரிசையாக இருப்பதை இரண்டு நாளாக பார்த்தேன் . 

உடன் என் இனிய நண்பர் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் திரு .ராஜ்குமார்அவர்களை அலைபேசியில் அழைத்து மண்  வரிசையாக குவித்து  வைத்து இருப்பதை தெரிவித்தேன் .உடன்  மண் குவியல் அனைத்தும் அள்ளிட நடவடிக்கை எடுத்து விட்டார் .இன்று மண் குவியல் இல்லை .மதுரை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் திரு .ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி !

துப்புரவு பணியாளர்களுக்கும் பாராட்டுகள் .தினமும் கூட்டி மிக சுத்தமாக வைத்துள்ளனர் .


கருத்துகள்