குழந்தைப் பாடல் கவிஞர் அழ .வள்ளியப்பா வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

குழந்தைப் பாடல் கவிஞர் அழ .வள்ளியப்பா வாழ்க !

கவிஞர் இரா .இரவி ! 

அழ .வள்ளியப்பா என்ற அவரது பெயரினை !
அழகிய பாடல்கள் வடித்த வள்ளியப்பா எனலாம் !

கவிதையோடு நின்றுவிடாமல் கதைகளும் வடித்தார் !
கற்கண்டு சொற்க்கொண்டு கவிவிருந்து வைத்தார் !

புதுக்கோட்டை மாவட்டம் இராயவரத்தில் பிறந்த தமிழ்வரம் !
புதுப்புதுப் பாடல்கள் குழந்தைகளுக்குத் தந்த தமிழ் இமயம் !

நாட்டு விடுதலைக்கு முன்பே அவரது முதல் !
பாட்டு நூல் மலரும் உள்ளம் வந்து மகிழ்வித்தது !

ஆயிரத்திற்கும் அதிகமான  அற்புதப் பாடல்கள் யாத்தவர்!
அனைவரின் உதட்டிலும் உள்ளத்திலும் நின்றவர் !


தோசையம்மா தோசை ! என்று இராகம் பாடினால் !
தோசையும் அம்மாவும் மனக்கண்ணில் தோன்றும் !

அணிலே அணிலே ஓடி வா ! என்று பாடினால் போதும் !
அணிலே வந்து நின்று கேட்டு   விட்டுப்  போகும் !

வட்டமான தட்டு தட்டு நிறைய லட்டு  என்றால்  போதும் !
லட்டின் சுவை நமது  நாவிற்கு வந்து போகும் !

மாம்பழமாம் மாம்பழம் ! என்று பாடினால் போதும் !
மாம்பழத்தின் சுவை மனதில் வந்துபோகும் !

பிஞ்சுகளின் உள்ளங்களில் பதியும் வண்ணம் !
பஞ்சு போன்ற மென் சொல் பாடல் வடித்தவர் !

இவர் பாடல் பாடாத குழந்தை இல்லை !
இவர் பாடல் பாடாத குழந்தை குழந்தையே இல்லை !

தமிழ்மொழி அழியாமல் காத்திட்ட காவலர் !
தமிழ்மொழி உள்ளவரை அவர் புகழ் நிலைக்கும் !

குவளயத்தில் குழந்தைகள்  இருக்கும் வரை !
குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா புகழ் அழியாதப்பா !

கருத்துகள்