ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !     கவிஞர்  இரா .இரவி !

வழக்கொழிந்தது  கூட்டுக்குடும்பம் 
வழக்காடு   மன்றமானது 
குடும்பம் !

பால் விலை உயர்வு 
புட்டிப்பாலுக்கும் வேட்டு 
பாவம் குழந்தைகள் ! 

இயந்திரமயமான உலகில் 
இயந்திரமாக மனிதர்கள் 
அன்பு ?

எல்லாம் கிடைக்கும்    
அயல் நாட்டில் 
பாசம் ?

இந்தியாவின் 
தேசிய நோய் 
சர்க்கரை !

அரசியல்வாதிகளின் 
தேசிய நோய் 
ஊழல !

அரசு அலுவலருக்குச் சிறை 
அரசியல்வாதிக்கு  குளு  குளு  அறை
கையூட்டு !

ஒற்றுமையில்லை 
சொல் செயல் 
அரசியல்வாதி!

சிலர் கோடிக்கு அதிபதி 
பலர் தெருக் கோடியில் 
இந்தியா !

சுத்தம் சோறு போட்டது 
காகிதம் பொறுக்கும் 
சிறுவனுக்கு !

வளங்கள் இருந்தும் 
வறுமை ஒழியவில்லை 
வளமான பாரதம் ?

கோடிகளில்  ஏவுகணை 
கோடிகளில் ஆயுதங்கள் 
அமைதி?

உணர்வீர் 
உணவில்  நவீனம் 
உயிருக்குக்  கேடு !

மெல்லக் கொல்லும்
கொடிய நஞ்சு 
குளிர்பானம் !


இராகம் பற்றிய 
கவலை இல்லை 
தவளை !

நிறம் பற்றிய 
கவலை இல்லை 
காகம் !

தாய்மை பற்றிய 
கவலை இல்லை 
குயில் !

தாவுவதில் தவறினால் 
தள்ளி வைத்திடும் 
குரங்கு !

பசித்த போதும் என்றும் 
உண்பதில்லை புல்
புலி !

புழுவின் மீது ஆசை 
மாட்டியது தூண்டிலில் 
மீன் !

தேங்காய்   ஆசை 
மாட்டியது கூண்டில்  
எலி !

அகிலம் உணர்ந்த உண்மை 
ஆசையே அழிவுக்குக் காரணம் 
அறிவு ஜீவி புத்தர் ! 

அழகு உண்டு 
மணம் இல்லை 
காகிதப் பூ !

நானே கடவுள் என்றார் 
மனிதனாகத்  தகுதியற்றவர் 
சாமி யார் ?

என்றும் ஒட்டுவதில்லை
மரத்தில் 
உதிர்ந்த மலர் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்