மாற்று மருத்துவ கருத்தரங்கம் ! தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !



மாற்று மருத்துவ கருத்தரங்கம்  !    தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி !

மக்கள் சேவை சங்கமும் ,செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து  மருத்துவ கருத்தரங்கம் மதுரை மன்னியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .நுகர்வோர்  உரிமை பாதுகாப்பு பேரவையின் பொருளாளர் திரு முத்து கிருஷ்ணன் வரவற்றார்  .

கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து  .அலோபதி தவிர்த்த மற்ற சித்தா ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி மருத்துவங்களின் சிறப்பை சொல்லி கருத்தரங்கை தொடங்கி  வைத்தார் .

செல்லமுத்து  - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர்  திரு செ.இராசேந்திரன் கருத்தரங்கம் பற்றி  அறிமுக உரையாற்றினார் .நுகர்வோர்  உரிமை சங்கத்தின் உதவித் தலைவர்   திருச்சி சந்தர் வாழ்த்துரை வழங்கினார்  .

சமயநல்லூர் அரசு சித்தா மருத்துவர் திரு .சி .சுப்பிரமணியன் சித்தா மருத்துவத்தின் நன்மையை அருமை பெருமையை சித்தர்களின் பாடல்களுடன் தமிழ் இலக்கியத்தில் உள்ள கவிதைகளுடன் எடுத்து இயம்பினார் .இஞ்சி .சுக்கு ,மிளகு ,கருவேப்பிலை ,மல்லி ,புதினா, சீரகம் மஞ்சள் ஆகியவற்றின் மருத்துவ நன்மைகள் பற்றி விரிவாக விளக்கினார்கள் .

மாற்று  மருத்துவம் அல்ல சித்த மருத்துவம் மக்கள் மருத்துவம் தொன்மையான மருத்துவம்.வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளை  முதியோர் இல்லம் அனுப்பி விட்டோம் .அதனால் பாட்டி வைத்தியம் இல்லாமல் போனதால் குழந்தைகளுக்கு நோய்கள் வருகின்றன. முதியோர்களை மதித்து வீட்டில் வைத்து  பேண  வேண்டும் .பேரன் பேத்திகளுக்கு  அவர்கள் அன்பு உளவியல் ரீதியாக நல்ல பல்கன் தரும் .  குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு கருவேப்பிலை சிறந்து மருந்து அரைத்து குடிக்கலாம் .நல்ல பலன் வரும் . குழந்தையின்மைக்கு பெண்களுக்கு மல்லி சிறந்து மருந்து அரைத்து குடிக்கலாம் .நல்ல பலன் வரும் .

அகத்தியர் பாடல் 48 வரிகளில் உள்ளது .அதில் அனைத்து மருத்துவ கருத்துக்களும் உள்ளன .தினமும் கீரை சூப் அருந்துங்கள் .பொன்னால் ஆன மேனி கிடைக்கும் இந்த கீரை உண்டால் .அதுதான் பொன்னாங்கண்ணி. பொன்னாகும்   காண் நீ  என்பதே பொன்னாங்கண்ணி என்று ஆனது .அகம் சீர் செய்வது சீரகம் .

கடுக்காய் 156 வகை நோய் தீர்க்கும் மருந்து .10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு சாப்பிடலாம் .காரணம்  மிளகு நஞ்சு முறிக்கும் .பாம்பு கடித்தால் மிளகுகளை வாயில் போட்டு மென்றால் மிளகின் ருசி தெரிந்தால் கடித்தது சாதாரண பாம்பு.பயம் இல்லை ருசி தெரியாவிட்டால் நஞ்சுள்ள பாம்பு.

நிலவேம்பு கசாயம் அலோபதி மருத்துவர்களாலும் ஏற்கப்பட்ட மருந்து .வெந்தயத்தில் இரும்பு சத்து  உள்ளது .சித்தரத்தை மிக நல்ல மருந்து .சிறிய வெங்காயம் இரத்த அழுத்தம் நீக்கும் நல்ல மருந்து .நம் உணவில் அதிகம் சின்ன வெங்காயம் சேர்த்தல் நோய் வராது.எமஉருகு நோய் ( எயிட்ஸ்க்கும்) சிறுசெருப்படை மூலிகை மருந்தாகும் . இதற்கும்  பாடல் உள்ளது .தூதுவளை சளியை நீக்கும். முருங்கைக்கீரை ,பசலைக்கீரை உடல் நலத்திற்கு  மிகவும் நல்லது 

பிராத்னா ஆயுர்வேத நல மையம் தலைமை மருத்துவர் திரு. 
டி.எம் .பிரசன்னா குமார் அவர்கள்    ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகளை எடுத்து இயம்பினார் .நோயாளியின் நாடி பிடித்து பார்த்தே நோயை சொல்லி விட முடியும் .அலோபதி போல தேவையற்ற சோதனைகள் ஆயுர்வேத மருத்துவத்தில்  தேவை இல்லை  .எண்ணெய் தேய்த்து குளிப்பதை பலர் நிறுத்தி விட்டோம். அதனால்தான் நோய்கள் வருகின்றன .தொடர்ந்து  எண்ணெய் தேய்த்து குளித்தால் நோய்கள் வராது 

 கேராளவில் சிலர் தினமும் எண்ணெய்  தேய்த்து குளிக்கின்றனர் .நாம் வாரும் ஒரு முறையாவது   எண்ணெய்  தேய்த்து குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது .வெப்பம் தணிக்கும் பள்ளி ஆசிரியை தன் மாணவ மாணவியரிடம் என்னை தேய்த்து குளிப்பதை வலியுறுத்தி வந்தார்கள். முதலில் எதிர்த்த பெற்றோர்கள் பின் கடைபிடித்தனர் .விளைவு உடல் நலமின்றி அடிக்கடி விடுப்பு எடுத்தவர்கள் எப்போது விடுப்பு எடுக்கவில்லை . நடந்த உண்மை இது .

நெய் என்பது அமிர்தம் போன்றது .பிறந்த குழந்தை முதல் வயது முதியவர்கள்  வரை பயன்படுத்தலாம் .நெயில் இரத்த கொழுப்பு இல்லவே இல்லை .நெய் மூளைக்கு சிந்தனைக்கு மிகவும் நல்லது .
அரிசி உணவு விடுத்து சிறு தானிய உணவு உண்டால் சர்க்கரை  நோய்  வராது . கசாயம் குடிக்க அஞ்சினால் நோய் தீராது என்றார்.நம் உடலுக்கு நாம் தான் முதல் மருத்துவர் .உணவு பற்றி அவரவர் அறிந்து கொள்ள வேண்டும் .எந்த உணவால் ஒவ்வாமை ஏற்படுகிறதோ அவற்றை தவிர்த்தால் நோய் வராது .

அலோபதி மருத்துவர்கள் தலையில் தண்ணீர்  ஊற்றாதீர்கள் என்பார்கள் .அது தவறு .தினமும்  தலையில் தண்ணீர் ஊற்றுவது உடல் நலத்திற்கு நல்லது .

மதுரை ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் தலைவர் திரு .
எம் .எம் .அப்துல் காசிம் அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை எடுத்து இயம்பினார் .அலோபதி மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்கும் ஆற்றல்  ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு என்று பல உதாரங்கள் சொல்லி விளக்கினார். அனைத்திற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளது என்றார் .

ஹோமியோபதி மருத்துவர் ஹனிமன் அலோபதி M.D படித்தவர். அலோபதி மருத்துவம் புரிந்தவர் .அலோபதியில் நோய் திரும்பத் திரும்ப வருகிறதே .நோய்   திரும்ப வராமல் தடுப்பதற்கு ஆய்வு செய்து கண்டுபிடித்ததே ஹோமியோபதி.

நோய் எதிர்ப்பு  சக்தி வளர்ப்பது நோய்  திரும்ப வரவிடாமல் தடுப்பது ஹோமியோபதி என்றார் . கர்பப்பை  எடுக்க வேண்டும் என்று அலோபதி மருத்துவர்கள்  சொன்ன பெண்களுக்கு மருந்தால்  குணபடுத்தி உள்ளேன் என்றார் .முன்பெல்லாம் ஹோமியோபதி மருத்துவர் என்றால் கேலி பேசுவார்கள் .இப்போது பலர் தேடி வந்து மருத்துவம் செய்கின்றனர் .மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது என்றார்.மற்ற மருத்துவம் நோய்களுக்கு சிகிச்சை தருகின்றன. ஆனால் ஹோமியோபதி நோயாளிக்கு   சிகிச்சை தருகின்றன.அலோபதியில் காய்ச்சல் என்றால் ஒரே வகை மாத்திரை ஆனால்  ஹோமியோபதியில் நோயாளிக்கு தகுந்தபடி மருந்து உள்ளது . நோயாளிக்கு நடந்து வந்து அமரும் விதத்திலேயே எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிந்து விடுவோம் .

மக்கள் சேவை சங்கத்தின் செயலர் கு .இராம மூர்த்தி அவர்கள்    3 மருத்துவர்கள் சொன்ன பயனுள்ள தகவல்கள் சொன்னமைக்கு நன்றி  கூறினார்  .  . 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்