என் இல்லத்தரசியின் இனிய அன்பு ! கவிஞர் இரா .இரவி !

என் இல்லத்தரசியின் இனிய அன்பு !    கவிஞர் இரா .இரவி !

என் இல்லத்தரசி திருமதி ஜெயசித்ரா இரவி இலக்கிய  ஈடுபாடு இல்லாதவர் .எனது  இலக்கிய  ஈடுபாட்டை தடுக்காதவர் .எனது பிறந்த நாள் அன்று அகவிழி  பார்வையற்றோர் விடுதி செல்வதை கடந்த சில வருடங்களாக கடை பிடித்து வருகிறேன் .அவர்களுக்கு கடையில் இனிப்பு வாங்கி செல்வேன் .

இன்று என்னுடைய பிறந்த நாள் . அகவிழி  பார்வையற்றோர் விடுதி புறப்படும் முன் என் இல்லத்தரசி திருமதி ஜெயசித்ரா இரவி அவர்கள் அவரே வீட்டில் செய்த இனிப்பு ரச உருண்டைகள் ( குலோப்ஜாமுன் ) விடுதி மாணவ மாணவியர்  அனைவருக்கும் வழங்கும் படி தந்தார்கள் .

ரூபாய் 500 தந்து நன்கொடை வழங்கவும்  தந்தார்கள். .
விடுதி மாணவ மாணவியருக்கு பயன்படும் வண்ணம் உணவு உண்ணும் தட்டுகளும் ,கிண்ணமும் கொடுத்து வழங்கிட வேண்டினார்கள் .இது போன்ற செயல்களில் ஈடுபாடு காட்டாத அவர்கள் .அகவிழி  பார்வையற்றோர் விடுதியின்  நிறுவனர் பார்வையற்ற மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்கள் தனக்கு பார்வை இல்லாவிட்டாலும் பார்வையற்றோர் விடுதி நடத்தும் செய்தி அறிந்து .ஈடுபாட்டுடன் உதவியது .மிக்க மகிழ்ச்சி . 

மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்களிடம் என்  இல்லத்தரசி திருமதி ஜெயசித்ரா இரவி தந்தவற்றை வழங்கியபோது மிகவும் நெகிழ்வுடன்  பெற்றுக் கொண்டார் .ரூபாய் 500 பெற்றுக் கொண்டு உடன் ரசீதும் தந்தார்கள். இவற்றை விடுதி மேலாளர் 
திரு .சீனிவாசன் புகைப்படம் எடுத்து மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். மற்றவர்களும் அகவிழி  பார்வையற்றோர் விடுதிக்கு உதவ முன் வர வேண்டுகிறேன் .
.

.




கருத்துகள்