வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! கவிஞர் இரா .இரவி !

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் !       கவிஞர் இரா .இரவி !

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள். தமிழ் இலக்கிய நூல்களை திருக்குறள் தொடங்கி குறிஞ்சிப்பாட்டு வரை 10 இலக்கிய நூல்கள் பற்றி கேள்வி பதில் முறையில் நூல் எழுதி அது பற்றி மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப் பள்ளியில்    மாதம் ஒரு முறை உரை நிகழ்த்தி வருகிறார்கள்  .உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் நிறைய வருகின்றனர் . மிக எளிமையாகவும் இனிமையாகவும் தமிழ் இலக்கியங்களை அறிமுகம்  செய்து அற்புதமாக எழுதியும் பேசியும்  வருகிறார்கள் .தமிழ் இலக்கியங்களை  அனைத்தும் கற்ற பேராசான் .

இந்த நூல்களை பள்ளியின் தாளாளரும், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவருமான திரு . பி .வரதராசன் அவர்கள் நூல்களை வெளியிட்டு ,விழா நடத்தி வருகிறார்கள் .நான் தொடர்ந்து இந்த விழாவிற்கு சென்று தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் கரங்களால் அறிமுக நூல்களை பெற்று வருகிறேன் .

வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்  தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு செம்மொழி நிறுவனமும் ,தமிழக அரசும்   விருது வழங்கி ஊக்கபடுத்த வேண்டும் .அவர் எழுதியுள்ள அரிய நூல்களை வெளியிட முன் வர வேண்டும் . பிற மாநிலங்களைப் போல  மொழி அறிஞரை போற்றி பாதுக்காக முன் வர வேண்டும் .

.

கருத்துகள்

கருத்துரையிடுக