தமிழறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 16.11.2014 அன்று மதுரை மணியம்மை பள்ளியில் ஆற்றிய ஆற்றிய உரையில் சில துளிகள் !

தமிழறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 16.11.2014 அன்று  மதுரை மணியம்மை பள்ளியில்
ஆற்றிய ஆற்றிய உரையில் சில துளிகள் !

தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

சோதிடம் நம்பாதே என்று நான் சொல்லவில்லை மகாகவி பாரதி சொல்லி உள்ளார் .

பணம் என்றால் பாம்பு என்று ஒரு பொருள்  உண்டு .

ஒப்பாரி என்றால் உனக்கு ஒப்பு யார் ? என்று சொல்லி அழுதல் .

அமெரிக்காவில்  நான் பார்த்த அணில்களின் முதுகில் மூன்று கோடுகள் இல்லை .

தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்ற 99 மலர்களில் மல்லிகை இடம் பெற வில்லை .மல்லிகை போல விடுபட்ட மலர்களும் உண்டு .

புது மனை ,புதுக்கடை திறப்பு  விழாவின் போது கத்தரியால் வெட்டுவது முறையோ ? இது நமது பண்பாடு அன்று .

பிறந்த நாளின் போது ( கேக் ) வெட்டுவதும் முறையன்று . இது நமது பண்பாடு அன்று .

திருமணத்தில் வந்த அனைவரிடமும் மலர்கள் வழங்கி தூவும்போது மணமக்கள் தலையில் விழாமல் மற்றவர் தலை விழ எல்லோரும் தலையைத் தடவுகின்றனர் .திருமணத்தில் தலையைத் தடவலாமா ? மணமகன் மணநாள் அன்று கோபித்து காசி யாத்திரை செல்வதும், பெண்ணின் தந்தை அழைத்து வருவதும் இது நமது பண்பாடு அன்று .

இப்படி 70 வகையான பண்பாட்டு சிதைவு தமிழர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன .  

கருத்துகள்

  1. தமிழ்க் கடல் இளங்குமரனார் அவர்கள் தமிழுக்குக் கிடைத்தப் பெரும் பேறு நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக