ஜூனியர் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .

ஜூனியர் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .


நேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர் , சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் முது முனைவர் வெ .இறையன்பு 
இ .ஆ .ப . அவர்கள் ஜூனியர் விகடன் இதழில் மனிதனைத் தேடி தொடரில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள் விளக்கத்துடன் படித்து மகிழ்ந்தேன் .வாரம் இரு முறை இந்தத் தொடர் ஆரவாரமாக வந்தது .ஆர்வமுடன்   படித்துவிட்டு   படி எடுத்து ( ஸ்கேன் ) செய்து மின் அஞ்சல் குழுக்களுக்கும் ,முக நூல் நண்பர்களுக்கும் ,எனது வலைப்பூவிலும் பகிர்ந்து வந்தேன் .படித்து விட்டு பலரும் பாராட்டினார்கள் .வெளிநாட்டு நண்பர்களும்   பாராட்டினார்கள்.பகிர்ந்தமைக்கு என்னையும்  பாராட்டினார்கள்.

ஜூனியர் விகடன் எப்போது வரும் என்று வழி மேல் விழி வைத்து காத்து இருந்து வாங்கி படித்தோம் .அறிவார்ந்த தொடரை பிரசுரம் செய்த ஜூனியர் விகடன் இதழுக்கும் எழுதிய முது முனைவர் 
வெ .இறையன்பு அவர்களுக்கு பாராட்டுக்கள் .

 உளவியல் ரீதியான கருத்துக்கள் அறிவியல் உண்மைகள், பன்னாட்டு ஒப்பீடுகள், மனிதஇனத்தின்  வளர்ச்சி,  முக அமைப்பு இதழ் அமைப்பு ,சிரிப்பு ,பல் அமைப்பு ,பண்பாடு என அனைத்தும் தொடரில் வந்தன .10 நூல்கள் படித்த உணர்வை ஒரு கட்டுரை தந்தது .

ஒரு கட்டுரையில் பல்வேறு அரிய புதிய தகவல்களை அறிய முடிந்தது .கேள்வி பதில்கள் பகுதி வாசகர்களை சிந்திக்க வைத்து புதுமை நிகழ்த்தியது .பாராட்டுக்கள் .எல்லா விடையும் இது சரியோ அது சரியோ என சிந்திக்க வைத்தது .நிறைவாக விடையோடு விடைக்கான விளக்கம் மிக நன்று .

பிரசுரம் செய்த தங்களுக்கும் .தொடரை விறுவிறுப்பாக   எழுதிய முது முனைவர் வெ .இறையன்பு அவர்களுக்கும் பாராட்டுக்கள்  முது முனைவர் வெ .இறையன்பு .அவர்களின் புதிய தொடரை ஆனந்த விகடன் இதழில்  படிக்க ஆவலோடு காத்து இருக்கிறோம் .

கருத்துகள்