பாவையின் பார்வை போதும் ! கவிஞர் இரா .இரவி

பாவையின் பார்வை போதும் !  கவிஞர் இரா .இரவி

பாவையின் பார்வை போதும்
பரவசம் என் வசம் !
உற்று நோக்கினால்
உத்வேகம் பிறக்கும் !
இமைக்காமல்   பார்த்தால்
புதுத்தெம்பு  உண்டாகும் !
கம்பியில்லா மின்சாரம்
கண்கள் வழி பாயும் !

அவளை
பார்த்துக் கொண்டே இருந்தால்
இமைக்க இமைகள்
மறக்கின்றன !
நேரம் செல்வதையும்
மறந்து விடுகின்றேன் !

அவளின் இதழ்கள்
உச்சரிப்பை விட
கண்களின்  மவ்வுன   உச்சரிப்பு
மெய் சிலிர்ப்பு !
.
காந்தம் கூட
அருகில் வந்தால்தான்
இரும்பை  இழுக்கும் !
அவள் கண்களோ
தூரத்திலிருந்தே
என்னை  இழுக்கும் !

அவள் இதழ்கள் அசைத்து
எதுவும் பேசவில்லை
அவள் விழிகளால்
எல்லாம் பேசினாள் !

காதலனுக்கு மட்டும் புரியும்
விழி மொழி !
மற்றவர்களுக்கு அம்மொழி
புரிவது இல்லை !கருத்துகள்