நடுவணரசுக்கு வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !

 நடுவணரசுக்கு வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !


திரையரங்குகளில் நடுவணரசு விளம்பரப் படங்கள் காட்டுகின்றனர். அவை தமிழில் மொழி மாற்றம் செய்யாமல் இந்தியிலேயே ஒளிபரப்பாகின்றது.

பிரதமர் மோடி அவர்கள் சுத்தம் பற்றி, சுகாதாரம் பற்றி, காந்தியடிகள் பற்றி, இந்தியில் பேசுவதால் யாருக்கும் புரிய வில்லை .படத்தின் நோக்கம் நிறைவேறாமல் .பார்ப்பவர்கள் புரியாத மொழி என்பதால் கோபம் அடைகின்றனர் .

இப்படி இந்தியில் ஒளிபரப்புவதால் யாரும்  இந்தி  கற்க போவது இல்லை .

முன்பெல்லாம்  நடுவணரசு விளம்பரப் படங்கள்  தமிழில் மொழி மாற்றம் செய்தே ஒளிபரப்பினார்கள் .

நடுவணரசு விளம்பரப் படங்களை அந்தந்த மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பினால்தான் நோக்கம் நிறைவேறும் .
 
பண்பலை வானொலிகளிலும் நடுவணரசு விளம்பரம் இந்தியிலேயே ஒலிபரப்புகிறார்கள்.இதை கேட்கும்  பொது மக்களுக்கு எதுவும் புரியவில்லை நோக்கம் நிறைவேற வில்லை .

கருத்துகள்