இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் பாராட்டு .

இனிய  நண்பர்  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் பாராட்டு . 


26.10.2014 இன்று  மதுரையில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா நடந்தது
இனிய  நண்பர்  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார் .  பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த என்னை காண்பித்து .எனது நண்பர் கவிஞர் இரா.இரவி இவரை பல ஆண்டுகளாக அறிவேன் .மதுரையில் இருந்து கொண்டு உதவி சுற்றுலா  அலுவலாராகப் பணி புரிந்து கொண்டு ஹைக்கூ கவிதைகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வை விதைத்து வருபவர் .இவரது இணையங்கள்  வலைப்பூ    www.kavimalar.com  www.eraeravi.com  www.eraeravi.blogspot.in  
5 லட்சம்  பேருக்கு  மேல்  பார்த்து உள்ளனர் .உலக அளவில் பலரால் அறியப்பட்டவர் .இணைய உலகில்  பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்து  ஜாம்பவானாக இருந்து வருகிறார் .அது மட்டுமல்ல இவரிடம் உதவி என்று கேட்டால் எப்பாடு பட்டாவது உதவி விடுவார் .நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர் ..

அவரது பாராட்டுரை கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன் .பல வருடங்கள் உழைத்த உழைப்பிற்கு அங்கீகாரமாக இருந்தது அவர் உரை .

இந்த நிகழ்வை இனிய நண்பர் ராஜ்குமார் ஒளிப்பதிவு   செய்து அவரது வலைப்பக்கம் மதுரை பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பினார் .

கருத்துகள்