மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !

மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! 

கவிஞர் இரா .இரவி !

புத்தரை வணங்கும் நாடு இன்று 
புத்திக் கேட்டு போனது ஏனோ ? 

அகிம்சை புத்தரை வணங்குவது நடிப்பா ?
இம்சை தரும்   மரண தண்டனை தரலாமா ?

அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு !
அவர்கள் உயிருக்கு சுருக்குக் கயிறு முறையா ?

நீதி என்ற பெயரில் தமிழர்களுக்கு  அநீதி !
நீதிபதியின் பெயரில் ராஜபட்சேயின் அநீதி !

ஐ. நா.மன்றம் தண்டிக்கும் தருணத்தில் 
என்ன திசை திருப்பும் செயலா ?
.
தமிழன் உயிர் மட்டும் இவ்வளவு மலிவா ?
தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற நினைப்பா ?

சுண்டைக்காய் நாடு நம்மை அடிக்கடி 
சீண்டிப்பார்கிறது பாடம் கற்பிப்போம் !

ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போது 
இனத்தையே திட்டமிட்டு அழித்த போது 

அடுத்த வீட்டில் தானே தீ என்று நாம் 
அலட்சியமாக இருந்தோம் !

அந்தத் தீ இன்று நம் வீட்லும் பற்றியது !
அப்பாவி தமிழக மீனவர்களை கொல்கிறான் !

சிங்கள இன வெறி பிடித்த பிட்சுக்கு !
சீராட்டி அஞ்சல் தலை வெளியிட்டது  தவறு !

மத்தியில் ஆட்சி மாறிய போதும் 
மாற்றம் இல்லை காட்சியில் !

தமிழர்களை கொன்று குவிக்கும் 
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் 

தரம் கேட்ட இலங்கை பாம்புக்கு 
தாரளமாக பால் வார்ப்பதை நிறுத்துங்கள் !

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் 
இனியாவது மாற்றம் காண்க !

இந்தியனான  தமிழக மீனவர்களை தாக்கினால் 
இலங்கையை திருப்பித் தாக்குக !

கோடிகளை அள்ளிக் கொடுப்பதையும் 
கொடிய ஆயுதப்பயிற்சி தருவதையும் 

உடனடியாக நிறுத்துங்கள் இல்லையேல் 
உங்களால் தமிழ் இன உணர்வை நிறுத்த முடியாது !

நாய் வாலை என்றும் நிமிர்த்த  முடியாது  !
இராஜபட்சேயை என்றும் திருத்த முடியாது  !


இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடுக !
எம தமிழர் உயிர்களை   உடன் காத்திடுக !

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதியுங்கள் !
இலங்கையோடு உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் !

வழங்கிய கோடிகள் அனைத்தையும் 
வட்டியோடு திரும்பப் பெறுக  !

எரியும் கொள்ளியை அகற்றினால் 
கொதிப்பது உடன் அடங்கும் !

இலங்கைக்கு உதவுவது நிறுத்துக 
ஏற்கனவே உதவியதை பெறுக  !

இலங்கை நட்பு நாடு என்போரே சிந்திக்க !
இந்தியருக்கு தூக்கு வழங்குவது நட்பா !

இராமேசுவரம் தமிழர்களுக்கு வேண்டுகோள் !
தண்டவாளம் தகர்க்க வேண்டாம் !

பேருந்தை எரிக்க வேண்டாம் !
போதுசொத்தை சேதப்படுத்த வேண்டாம் !

நட்டம் நமக்குத்தான் அவனுக்கு அல்ல !
நாம் ஒன்று பட்டு குரல் தருவோம் !

அப்பாவி  மீனவர் ஐவரை மீட்போம் !  
அல்லல்படும் குடும்பத்தின் கண்ணீர் துடைப்போம் !
 
மனிதாபிமானமற்ற இலங்கைக்கு எச்சரிக்கை  !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !

கருத்துகள்