மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது . தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திரு. ஆ . முத்து கிருஷ்ணன் ,திரு.பிரபு , வாழ்த்துரை .வழங்கினார்கள். கவிஞர்கள் கே .விஸ்வநாதன் , நிலா சந்திரன் தன்னம்பிக்கை கவிதைவாசித்தார்கள்.
மதுரை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரி முன்னை தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் 'தமிழ் இலக்கியங்களில்மதுரை தன்னம்பிக்கை ' என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் உலகில் இல்லை .என்றார் .திருக்குறளில் தன்னம்பிக்கை கருத்துக்கள் மலையளவு உள்ளது அவையின் ஆதிச்சூடி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை உணர்ந்து படித்து நடந்தால் தன்னம்பிக்கை பிறக்கும் .வாழ்க்கை இனிக்கும் . என்றார் .

ஜனநேசன் நன்றி கூறினார் . தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்
ரெ .கார்த்திகேயன் உதவியாளர் மோகன் கை வண்ணத்தில் .




கருத்துகள்