மதுரை திருப்பாலை கிளை நூலக வாசகர் வட்ட விழா !
வாசகர் வட்டத்தின் தலைவர் பொறியாளர் எஸ் .கலிய மூர்த்தி தலைமை வகித்தார் .வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர்
திரு .முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் . தமிழாசிரியர்
க .சக்கையா பாண்டியன் வரவேற்றார் .
கவிஞர் இரா .இரவி வாசிப்பும் நேசிப்பும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிஞர் அண்ணா ,அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் ,மாவீரன் பக்தசிங் ,எழுத்தாளர் முது முனைவர் வெ.இறையன்பு ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் வாசிப்பும் நேசிப்பும் பற்றி விரிவாக பேசினார்.
நூலகர் திருவெ .லிங்கேஸ்வரன் நன்றி கூறினார் .திருப்பாலை கிளை நூலக வாசகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
.புகைப்படங்கள் .நூலகர் திருவெ .லிங்கேஸ்வரன் கை வண்ணத்தில் .
கருத்துகள்
கருத்துரையிடுக