‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.



‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150
*****
‘தனது எழுத்தாற்றல் சாதனைகளால் மிகச் சிறப்புற்றிருக்காத எந்த ஒரு மனிதரும் பிறரது படைப்புக்களை விமர்சிப்பது கேலிக்குரியது’ என்றார் மிகப்புகழ் பெற்ற ஆங்கில உரைநடையாளர் அடிசன் (Addison).  இருநூறு ஆண்டுகளுக்குப் பின் இதையே வழிமொழிவது போல “ஒரு மிகச்சிறந்த படைப்பாளி தான் விமர்சகராக இருக்க முடியும்” என்றார் திறனாய்வு மேதை.  லீவிஸ் (F.R. Leavis). இவ்விரு மேதைகளின் கூற்றுக்களையும் “புத்தகம் போற்றுதும்” நூல் வழியாக மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் இரவி.  

ஐம்பது அரிய நூல்களைப் படித்துவிட்டு, அவை தந்த அறிவாற்றலையும், இலக்கிய இன்பத்தையும் தன் இதயத்துள் வைத்துப் பூட்டியிருந்தால் அவர் ஒரு தன்னலவாதியாக இருந்திருப்பார்.  “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என இவ்வைம்பது நூல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அளவெடுத்து, நமக்கெல்லாம் அதைப் “புத்தகம் போற்றுதும்” என்ற அழகுறு வடிவத்திலும், வண்ணத்திலும் காட்டுவதன் வழியாகக் கவிஞர் இரவி இலக்கிய உலகில் 
ஈடு இணையற்ற பொதுநலத் தொண்டராகவும் திகழ்கிறார்.
பெயர் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் இராசாராம், புகழ்மிக்க எழுத்தாளர்கள் முனைவர் மோகன், பேராசிரியர் அருணன், இந்திரா சௌந்தர்ராஜன், முனைவர் ஞானசம்பந்தன் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் போன்றோரின் உரைநடை நூல்கள், கவிஞர் இரவி போற்றும் நூல்களுள் சில; கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஏர்வாடியார், பா. விஜய், அறிவுமதி, தங்கம் மூர்த்தி, நெல்லை ஜெயந்தா மற்றும் மிகப்பிரபலமான கவிஞர் பெருமக்களின் கவிதை நூல்களும் இரவி போற்றும் நூல்களின் வரிசையில் உண்டு.  புகழ்பெற்ற இந்நூல்களுக்கிடையே எழுத்துலகில் மிக எளியவனான எனது நூலையும் (திருக்குறள்-ஒப்பியல் நூல்) இடம் பெறச் செய்திருப்பதால் எனது நூல் “பூவுடன் சேர்ந்த நார்”போல புகழ் மணம் பெறுகிறது.
“ஒரு நூலை விமர்சிப்பது எளிது, ஆனால் அதன் சிறப்பியல்புகளைப் பாராட்டுவது கடினம்” என்றார் ஓர் அறிஞர்.  கவிஞர் இரவி, தான் எடுத்துக் கொண்ட அனைத்து நூல்களிலும் ஆக்கப்பூர்வமான பக்கங்களையே பார்க்கிறார்.  “புத்தகம் போற்றுதும்” நூலைப் படிக்கின்ற நூலாசிரியர்-கட்கெல்லாம் நிச்சயம் ஒரு “தாகம்” ஏற்பட்டிருக்கும் “கவிஞர் இரவியின் பார்வையில் படாதா நம் நூல்”.

 “மனிதநேயம்” பரப்புகின்றவன் என்ற எளிய, இனிய பொறுப்புடன் கூறுகின்றேன்.  கவிஞர் இரவியின் “புத்தகம் போற்றுதும்” ஓர் இலக்கிய அடையாளம்  மட்டுமல்ல, மானுடம் போற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டின் முத்திரையும் ஆகும்.

மனிதநேயம்  மாத இதழ் !
18, மெய்யப்பன் 2-வது தெரு, ஞானஒளிவுபுரம்,
மதுரை – 625 016.
ஆண்டுச் சந்தா ரூ. 100/-  
ஆயுட்சந்தா : ரூ. 1000/-
புரவலர் நிதி : ரூ. 2000/-
போன்: 0452-2603158   செல் : 97901 28232
.manithaneyajames@hotmail.com


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்