ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் அனைத்து கல்லுரி மாணவ மாணவியருக்கு கவிதை ,கதை எழுதும் பட்டறை

  24.9.2014 இன்று  சிவகாசி  ஸ்ரீ  காளீஸ்வரி  கல்லூரியில் அனைத்து கல்லுரி மாணவ மாணவியருக்கு கவிதை கண்ணோட்டம் என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதை எப்படி என்று கவிஞர்   இரா .இரவி  பயிற்சி அளித்தமைக்கு பாராட்டி  சான்றிதழ் வழங்கினார்கள். பயிற்சியின் முடிவில் கலந்து கொண்டவர்களில் 10 மாணவ மாணவியர் ஹைக்கூ கவிதை சொன்னார்கள் .

த .மு . எ .க . ச  சிவகாசி எழுத்தாளர் திரு .சண்முகம் கதை எழுதுவது எப்படி பயிற்சி   என்று  அளித்தார் .முடிவில் மாணவ மாணவியர்  கதை சொன்னார்கள் .திரைப்பட உதவி இயக்குனர் ஷ்டாலின் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் .விழாவில்  கல்லூரி முதல்வர் முனைவர் கண்மணி , ஒருங்கிணைப்பாளர்  முனைவர் பாரிஜாதம்,  பேராசிரியர்களும், தமிழ்த் துறைத் தலைவர்களும் ,உதவிப் பேராசிரியர் மணி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கருத்துகள்