துபாயில்' புத்தகம் போற்றுதும் நூல் ' அறிமுக நிகழ்ச்சி
துபாய் : துபாயில் தமிழ் வாசகர் வட்டத்தின் சார்பில் புத்தகம் போற்றுதும் எனும் நூல் அறிமுக நிகழ்ச்சி 26.09.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தகம் போற்றுதும் எனும் நூல் மதுரை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உதவி அலுவலராகப் பணிபுரிந்து வரும் கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளது.
இந்நூல் துபாயில் அறிமுகப்படுத்தி கவிஞர் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழின் தலைநகராய் விளங்கிய மதுரை மாநகரைச் சேர்ந்த கவிஞர் ரவியின் நூல் அமீரக அன்பர்களின் மத்தியில் அறிமுகப்படுத்திடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. தமிழ் என்ற ஒற்றைச்சொல் கடல் கடந்தும் நம்மை இணைப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், நர்கிஸ், அனீசா, திண்டுக்க்கல் ஜமால் முஹைதீன், ரமணி, ஹெல்த் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத் செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக