கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு பாராட்டுகள் !

கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு பாராட்டுகள் !

பணம் இருப்பவர்களிடம் மனம் இருக்காது என்ற பொன்மொழியை பொய்யாக்கும்  வண்ணம் , பணமும் , மனமும் பெற்ற தங்களால் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது .80 பேருக்கு மேல் விருதுகள் வழங்கி சிறபித்தது சிறப்பு .விருது பெற்ற அனைவருக்கும் பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி ஒரு பை நிறைய நூல்களும் வழங்கியது சிறப்பு .

வீட்டை  கட்டிப் பார்  விழாவை நடத்திப் பார் என்பார்கள் .மாபெரும் விழாவை சென்னையில் நடத்திய பெருமை தங்களையே சேரும். உழைப்பால் உயந்து தமிழுக்கு , தமிழ் இலக்கியத்திற்கு நீங்கள் செய்து வரும் தொண்டு பாராட்டுக்குரியது .பாராட்டுக்கள் .

நீங்கள் நடத்திய விழாவின் காரணமாக தமிழ்நாடு அளவில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் மாபெரும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான் ,கவிவேந்தர் மேத்தா  ,திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் முத்துக்குமார் ,பழனி பாரதி ,யுகபாரதி  மற்றும் ஓவியர்க  புகழேந்தி உள்ளிட்ட பலரையும் பார்க்க, உரையாட வாய்ப்பாக இருந்தது .நானும் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களும் மதுரையில் இருந்து  சென்னை வந்து விழாவில் கலந்து கொண்டோம் .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கு சான்றோர்  விருது  வழங்கினீர்கள் .அவர்களையே விழாவிற்கு தலைமை ஏற்க வைத்தீர்கள் . அவர்களும் மிகச் சிறப்பாக தலைமையுரையாற்றினார்கள்.தங்களின் இரு நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது . 

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா  கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து  சென்னையில்  நடத்திய மாபெரும் விழாவில்   இணையத்திற்காக எழுத்தோலை விருது  சிலம்பொலி செல்லப்பன் அவர்களால்(கவிஞர் இரா. இரவிக்கு ) எனக்கும்   வழங்கினீர்கள் .

அன்புள்ள கவிஞர் கவிமுகில் அவர்களே தங்களின் தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துக்கள் .
புதுகைத் தென்றல்   மு .தருமராசன் ,பேராசிரியர் பானுமதி  தருமராசன் .கவிஞர்கள் மு .முருகேஷ் ,பொதிகை மின்னல் வசீகரன் ,மின்மினி கன்னிக் கோவில்ராஜா , ,  கவி ஓவியா மயிலாடுதுறை இளைய பாரதி ,ஆரிசன் ,உமையவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாட முடிந்தது


விழாவின் வெற்றிக்கு உழைத்தவர்கள்  முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் மற்றும்   தங்களின் சக்தி கார் நிறுவன பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள். மறக்க முடியாத நாளாக  இருந்தது .இலக்கிய மழையில்  நனைந்து வந்தோம் . 

கருத்துகள்