நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --

நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் !



நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர்   இளசை சுந்தரம் !

humourkingilasai@yahoo.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

புகழ் பதிப்பகம் நிர்மல்  அக்ரிணி  குடியிருப்பு ,ஆண்டாள் புரம் ,
மதுரை .3அலைபேசி 9843062817 விலை ரூபாய் 140.  

அழகப்பா பல்கலை  கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர்   முனைவர் மு .பாண்டி அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக நூலிற்கு அழகு  சேர்கின்றது .நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர்   இளசை சுந்தரம் அவர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களைப் போலவே எழுத்து ,பேச்சு  இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருபவர் .
.
மதுரை வானொலியில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பு ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்து  வருபவர். உலகில் இவர் செல்லாத நாடு இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நாடுகள் சென்று பேசி வருபவர் .நான் எந்த வெளிநாடு இதுவரை சென்றது இல்லை .ஆனால்  எல்லா நாட்டிலும் நண்பர்களும் கவிதை ரசிகர்களும் எனக்கு உண்டு .அவர் ஜெர்மனி  போகிறேன் லண்டன் போகிறேன்  என்றால் ஜெர்மனி ,லண்டன் நண்பர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி விடுவேன் .அவர்கள் வந்து நூல் ஆசிரியர்  முனைவர்   இளசை சுந்தரம்அவர்களை சந்தித்து வரவேற்று மகிழ்வார்கள் .

உலகம் சுற்றும் வாலிபன் என்று எம் ஜி .ஆரை சொல்வார்கள் .அது போலவே இவரையும் உலகம் சுற்றும் வாலிபன் என்றே சொல்லலாம் பல நாடுகள் சென்று உரையாற்றி வருபவர் ' நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம்'என்ற தலைப்பில் நூல் எழுதியது மிகப் பொருத்தம் .சொற்பொழிவாளர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .

பேச்சுக்கலை  ரகசியத்தை ,நுட்பத்தை நன்கு விரிவாக விளக்கி உள்ளார் .எப்படி தொடங்குவது எப்படி முடிப்பது .தொடக்கவுரை எப்படி இருக்க வேண்டும்  சிறப்புரை எப்படி இருக்க வேண்டும் .தொகுப்புரை எப்படி இருக்க வேண்டும் என்று நன்கு எழுதி உள்ளார்.புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சுவைபட எழுதி உள்ளார்.

தேசப்பிதா காந்தியடிகள் வெளிநாடு  சென்று பட்டம் பெற்று வந்த போதும் இந்தியாவில் முதன் முதலில் வழக்கறிஞர் தொழில் புரியும்போது நீதிபதி முன் பேச முடியாமல் தவித்தார் .பின்னாளில் உலகம் வியக்கும் வண்ணம்  ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார் .இந்த நிகழ்வை நூலில் எழுதி உள்ளார் . 

அறிஞர் அண்ணா பேச மேடையேறியபோது ஒலிவாங்கி மேடை உயரமாக இருந்தது .உடன் ஒரு தொண்டர் பலகை கொண்டு வந்து போட்டு அதன் மீது ஏறி அறிஞர் அண்ணாவை பேச வைத்தார் .உடன் அறிஞர் அண்ணா தொண்டர்களால்தான் அறிஞர் அண்ணா உயர்ந்தார் என்றார்கள் .அது இன்று மெய்யாகி விட்டது என்றார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது சட்டமன்றதில் ஒரு கேள்வி வந்தது .

யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால்  ( 127)
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு .

பேருந்தில்   இந்த திருக்குறள் எழுதி உள்ளனர் .நாகாக்க என்பது ஓட்டுனருக்கா ? நடத்துனருக்கா ? பயணிகளுக்கா ? என்றனர் .
உடனே அறிஞர் அண்ணா சொன்னார் நா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .அறிஞர் அண்ணாவின் பேச்சு ஆற்றலை நன்கு உணர்த்தி உள்ளார் .

நேரு  அவர்கள் லண்டன்  பி .பி .சி யில் உரையாற்றிய  போது பதிவு செய்யும் முன் நோட்டமாக பேசிட சொன்னார்கள் .நேரு அவர்களும் சிறிதும் தயக்கமின்றி முன்னோட்டமாக பேசி காண்பித்தார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .

அடிசன் என்ற அறிஞர் பேசும்போது I CONCEIVE,  I CONCEIVE ,  I CONCEIVE  நான் நினைக்கிறேன் ,நான் நினைக்கிறேன் ,நான் நினைக்கிறேன்.என்று முன்று தடவை சொல்லி விட்டு அதற்கு மேல் பேச முடியாமல் அமர்ந்து விட்டார் .கன்சீவ் எனபதற்கு கருவுறுதல் என்றும் ஒரு பொருள் உண்டு .உடன் அடுத்தவர் எழுந்து அடிசன் அவர்கள் மூன்று  முறை கருவுற்றார் ஆனால் ஒரு முறை கூட  பிரசவம் ஆகவில்லை என்றார் . இந்த நிகழ்வையும் எழுதி உள்ளார் .

சிலர் ஒலி வாங்கியை  கையில் வாங்கினாலே பயம் வந்து விடும் பேச்சு வராது  .ஆனால் ஒரு சிலர்  ஒலி வாங்கியை  கையில் வாங்கினாலே பார்வையாளர்களுக்கு பயம் வந்து விடும் இவர்பேச்சை நிறுத்தவே மாட்டாரே என்று . அப்படி  இல்லாமல் இனிமையாக பேசுவது எப்படி என்பதை நன்கு விளக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

வீட்டில் தனி அறையில் கண்ணாடி முன்னின்று பேசிப் பழகச் சொல்கிறார் .ஆற்றில், தோப்பில், வரப்பில் பேசிப் பழகச் சொல்கிறார் .பல யுத்திகளை எழுதி உள்ளார் .கடைபிடித்தால் பேச்சில்  முத்திரை பதிக்கலாம் .  

 ' கோழி முட்டையின் மீது சதா ஆடை காத்துக் கொண்டு இருப்பது போல நீங்கள் பேச எடுத்துக் கொண்ட விசயத்தைப் பற்றிச் சதா சிந்தித்துக் கொண்டே இருந்தால் கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவது போலப் புதிய கருத்துக்கள் துள்ளி வரும்.' .பிரௌன் என்ற அறிஞர் சொன்ன கருத்தையும் எழுதி நூலிற்கு பெருமை சேர்த்து உள்ளார் .

உலகப் பொது மறை வடித்த திருவள்ளுவரின் திருக்குறளையும் பொருந்தமான இடங்களில் பயன் படுத்தி உள்ளார் . சொற்பொழிவாளர்அதிக நூல் படிக்க வேண்டிய அவசியத்தையும் நன்கு உணர்த்து உள்ளார் .தொழில் முறை பேச்சாளர்கள்  ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமல்ல   மட்டுமல்ல தொழில்  புரிவோரும் ,பணி புரிவோரும் அனைவரும் இந்த நூல் படித்தால் பிறரிடம் எப்படி பேசினால் நன்மை பயக்கும் என்பதை விளக்கும் நூல். பலநூறு  மேடைகள்  கண்ட அனுபவசாலி அவர்களின் அனுபவ நூல் .
நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர்   இளசை சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்