மழையும் அவளும் ! கவிஞர் இரா .இரவி !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
மழை வந்தால்
மரங்கள் மகிழ்கின்றன !
அவள் வந்தால்
நான் மகிழ்கிறேன் !
வாடிய பயிர்கள்
மழையால் துளிர்க்கின்றன !
வாடிய நானும் அவள்
வருகையால் துளிர்க்கிறேன் !
மழை வந்தால்
தவளைகள் குதிக்கின்றன !
அவள் வந்தால் நானும்
ஆர்வத்தில் குதிக்கின்றேன் !
மழை விழுந்தால்
மண்ணில் வாசம் !
அவள் வந்தால்
என்னில் பாசம் !
உயிர்களுக்கு தேவை
உன்னத மழை !
எனக்கு தேவை
ஒப்பற்ற அவள் !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக