பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! திரைப்படம் ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் தந்த தலைப்பு !


திரைப்படம் ! கவிஞர் இரா .இரவி !

கதையை நம்பி அன்று 
சதையை நம்பி இன்று 
திரைப்படம் !

பண்பாடு கற்பித்தன அன்று 
பண்பாடு சிதைக்கின்றன  இன்று 
திரைப்படம் !
                                                                              
முதல்வராகும் ஆசையில்  வருகின்றனர் 
முன்வைப்புத் தொகை இழக்கின்றனர் 
திரைப்படம் !

பொழுது போக்கிட அன்று 
பொழுதை வீணாக்கிட  இன்று 
திரைப்படம் !

சமுதாயத்தைப்  பிடித்த நோய் 
பெரியார் கூற்று மெய் 
திரைப்படம் !


அத்தி பூத்தாற்ப்  போல 
என்றாவது மட்டும் வருகின்றது 
 நல்லபடம் 

கருத்துகள்