தூத்துக்குடி சுண்டாங்கோட்டையில் பிறந்தவர் !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வளர்ந்தவர் !
நாடகங்களில் நடித்து நடிப்பைப் பயின்றவர் !
சென்னை மாநகரம் சென்று திரையில் சிறந்தவர் !
மக்கள் திலகம் மனதாரப் பாராட்டிய நடிகர் !
மக்கள் யாவரும் மனம் குளிரப் பாராட்டிய நடிகர் !
கதாநாயகன் குணச்சித்திர நடிகர் முத்திரைப் பதித்தவர் !
கதைகளில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர் !
தில்லானா மோகனாம்பாள் படத்தில் தடம் பதித்தவர்
திருவிளையாடல் படத்தில் கம்பீரமாக நடித்தவர் !
காதலிக்க நேரமில்லை படத்தில் சிரிக்க வைத்தவர் !
புதுமைப்பித்தன் படத்தில் புதுமையாக நடித்து சிறந்தவர் !
வேலைக்காரி படத்தில் விவேகமான கருத்துச் சொன்னவர் !
வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசித்து மகிழ்ந்தவர் !
யாரையும் பின்பற்றமால் தனிப்பாதை வகுத்தவர் !
யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் பேசியவர் !
நூற்றாண்டு கண்ட பின்னும் மனங்களில் வாழ்பவர் !
நூறு ஆண்டுகள் ஆகியும் நினைவில் நின்றவர் !
திரைப்பட வரலாற்றில் தனி வரலாறு படைத்தவர் !
திரைத் துறையில் சுவடுகள் பதித்த வல்லவர் !
.பாலையா உனக்கு நிகர் யாரய்யா ?
கருத்துகள்
கருத்துரையிடுக