30.8.2014 மாலை மதுரை புத்தகத் திருவிழாவில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார்கள் .புகைப்படம் இனிய நண்பர் கவிஞர் ஞா சந்திரன் கைவண்ணத்தில் .
புத்தக வாசிப்பை சுவாசமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அறிஞர் அண்ணா ,பகத்சிங் ஆகியோரின் புத்தக வாசிப்பு ஆர்வம் பற்றியும் ,லெனின் நூல் எழுதிட பட்ட துன்பம் பற்றியும் , எடிசன் செய்த முயற்சிகள் பற்றியும் , ஆப்ரகாம் லிங்கன் அடைந்த தோல்விகள் செய்த சாதனைகள் பற்றியும் விரிவாக எடுத்து இயம்பினார்கள் .
குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் உரையில் இருந்து சிறு துளிகள் . கவிஞர் இரா .இரவி !
ஒரு துறவி ஓலைச்சுவடிகளுடன் படகில் சென்ற போது படகோட்டி' பாரம் அதிகமாகி விட்டது கொஞ்சம் ஓலைச்சுவடிகளை தண்ணீரில் போட்டு விடலாம் ' என்ற போது ஓலைச்சுவடிகளை பத்திரமாக அக்கரை கொண்டு சென்ற மடத்தில் சேர்த்திடு, நான். உயிரோடு இறந்தால் வந்து சேருகிறேன் என்று சொல்லி விட்டு படகில் இருந்து தான் குதித்தார் துறவி .தன் உயிரினும் மேலாக புத்தத்தை நேசித்தவர்கள் உண்டு .
ஓலைச்சுவடிகளை ஓடி ஓடி சேர்த்த தமிழ் தாத்தா உ .வே சாமிநாத அய்யரையும் நினைவு கூர்ந்தார் .குன்றக்குடி மடத்தில் இருந்து சிலப்பதிகார ஓலைச்சுவடிகள் பெற்ற வரலாறும் உண்டு .
ஓலைச்சுவடிகளை ஓடி ஓடி சேர்த்த தமிழ் தாத்தா உ .வே சாமிநாத அய்யரையும் நினைவு கூர்ந்தார் .குன்றக்குடி மடத்தில் இருந்து சிலப்பதிகார ஓலைச்சுவடிகள் பெற்ற வரலாறும் உண்டு .
மிகச் சிறந்த சிந்தனையாளர் ,நேர்மையான அதிகாரி ,சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் முது முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிந்தனையான ' வாசற்படி, தள்ளுபடி, படி, படி, உருப்படி' என்ற கருத்தை மேற்கோள் காட்டி மிக விரிவாக எடுத்துக்கூறி வாசகர்களின் கரவொலியைப் பெற்றார்கள்.
மனிதநேயம் வேண்டும் ,மத நல்லிணக்கம் வேண்டும் .இரக்க சிந்தனை வேண்டும்.மனிதன் மனிதனாக வாழ துணை புரிவது நூல்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக