மனிதம் மறந்து விலங்காவது ஒழிய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

மனிதம் மறந்து விலங்காவது ஒழிய வேண்டும் !   
கவிஞர் இரா .இரவி !

கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக !
கையை வெட்டும் காட்டுமிரண்டித்தனம் !

மனிதர்களா இவர்கள் இல்லை இல்லை !
மனித உருவில்  உள்ள விலங்குகள் !

வெட்டிய  கையை திரும்பத்தர முடியுமா !
வேதனை சிறுவனை ஊனமாக்கி விட்டார்கள் !

வள்ளுவன் அன்றே சொன்னான் சினம் கொடிது !
விவேகமாக சிந்தித்தால் மோதல் வராது !

பகுத்தறிவைப் பயன்படுத்துவது நல்லது !
பத்தாம்பசலித்தனம் போக்குவது  நல்லது !

பழிக்குப் பழி வாங்குவது விலங்குகள் குணம் !
பண்போடு வாழ்வது மனிதனுக்கு மணம் !

கையை வெட்டியதால் காவலரால் கைதாகி !
கம்பி எண்ணி சிறையில் வாடுவது தேவையா !

ஒரு நிமிடம் சிந்திக்காத காரணத்தால் !
வாழ்நாள் முழுவதும் சிறைப்படும் துன்பம் !

மனிதன் மனிதநேயத்தோடு வாழ வேண்டும் !
மனிதம் மறந்து விலங்காவது ஒழிய வேண்டும் !  


கருத்துகள்