அயலவர் அறிந்துள்ளனர்
நம்மவர் அறிந்திலர்
திருக்குறள் அருமை !
சேமித்தால் சிறப்பு
வீணடித்தால் இழப்பு
மழை !
பத்து மரங்களை வெட்டியும்
ஒரு மரம் நடவில்லை
வெப்பமயம் !
சோலைகள் சாலைகளாகின
கேள்விக்குறியானது
மழை !
மக்கும் குப்பை மக்கா குப்பை
பிரிக்கத் தெரியாத மக்காக
மக்கள் !
பரவியது
கிராமங்களிலும்
தமிங்கிலம் !
கூட்டுக்குடும்பம் உடைந்து
தனிக்குடும்பம் ஆனது
மறித்தது மனிதநேயம் !
உன்னை நீ விரும்பு
பிறரை பிறகு விரும்பு
வாழ்க்கை கரும்பு !
கருத்துகள்
கருத்துரையிடுக