தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து சில துளிகள் ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

31.8.2014  அன்று புத்தகத் திருவிழாவில் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து சில துளிகள் ! 

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

2 மணி நேரம் பார்வையாளர்களை தன பேச்சால் கட்டிப் போட்டு விட்டார் .சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் .திருக்குறளின் சிறப்பை அடிக்கடி சொன்னார்கள் .தேவாரம் திருவாசகம் ஆத்திச்சூடி பாடல்களை மனப்பாடமாகச்  சொல்லி வியப்பில் ஆழ்த்தினார் . தமிழ்க்கடல் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் . 


திருக்குறளை படியுங்கள் .குழந்தைகளை படிக்க வையுங்கள். வள்ளுவம் வழி வாழுங்கள் .மகிழ்ச்சியாக சிரித்துக்  கொண்டே வாழுங்கள் .அன்பு செலுத்துங்கள் .மனைவியை மதியுங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்.தன் குழந்தைகள் மட்டுமன்றி பிற  குழந்தைகளிடமும் அன்பு செலுத்துங்கள் .ஆசிரியர் இரும்பு தடியால்  மாணவன் கண்ணில் அடித்த செய்தி படித்தேன் .ஆசிரியர் மாணவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் . மாணவர்கள் ஆசிரியகளிடம் அன்பு செலுத்த வேண்டும்.

பணக்காரர்கள் பிறருக்கு உதவ வேண்டும் .யாருக்கும் உதவாத பணக்காரர்களை செத்த பிணம் என்கிறார் .பெண்கள் தயவுசெய்து தொலைக்காட்சித் தொடர் பார்க்காதீர்கள் .அதில் நல்ல செய்தி எதுவும் இல்லை .மாமியார் மருமகளை கொலை செய்ய முயலுவது, மருமகள் மாமியாரை கொலை செய்ய முயலுவது ,பழிக்குப் பலி வாங்குவது ,வக்கிரம் ,வன்மம் காட்டி வருகின்றனர் .நீங்கள் நடு வீட்டில் அமர்ந்து கொண்டு  தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்துக் கொண்டு குழந்தைகளை படி படி என்றால் எப்படி படிக்க முடியும்.

குழந்தைகளை இரவு நேரம் கண்  விழித்துபடி படி என்று துன்புத்தாதீர்கள். அதி காலை நேரம்தான் படிக்க உகந்த நேரம் .நான் தினமும் 4 மணிக்கு எழுந்து குயில் சதம் கேட்கும் நேரத்தில் படிப்பேன். நன்கு பதியும் .என் அம்மாவிடம்தான் பாடல்கள் கேட்டு கவிஞனானேன் .    

குழந்தைகளை 5 வயதிற்குக் குறைந்து பள்ளிக்கு அனுப்பாதீர்கள் . 5 வயது வரை வீட்டில் வைத்து நீங்களே சொல்லிக் கொடுங்கள். புட்டிப்பால் புகட்டாதீர்கள் .தாய்ப்பால்  கொடுக்க கொடுக்க  ஊறும் .நம் நாட்டில்தான் பிரதமரே தாய்ப்பால் கொடுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை .

யாரும்  குடிக்காதீர்கள் .குடித்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் ,குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப்  பார்த்தால் பார்த்தவனுக்கு குடிக்க மனம் வராது .குடித்தால் நாமும் இப்படித்தான் அவமானப்பட நேரிடும் என்று உணர்ந்து குடிக்க மாட்டான்  .என்று வள்ளுவர் சொல்கிறார் . குடிக்காக செலவிடும் பணத்தில் குடும்பத்திற்கு செலவிட்டுப் பாருங்கள் .மகிழ்ச்சி பொங்கும் .

ஊழல் உழைப்பு பெண்கள் கையில்தான் உள்ளது .கணவன் ஊதியம்  தவிர  கூடுதலாக பணம் கொண்டு வந்தால் கணக்கு கேளுங்கள் .ஏது என்று கேளுங்கள் .கையூட்டு  வாங்கினால் நம் குழந்தைகள் செத்துப் போகும்  என்று சொல்லுங்கள் .உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை மிக சுகமாக இருக்கும் .  கையூட்டு வாங்கி வாழ்ந்தால் எப்போது கைது ஆவோம் என்ற பயத்தோடுதான்  வாழ வேண்டும் .முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி வாழுங்கள் மனிதநேயத்தோடு  வாழுங்கள் . அவரவர் கடவுளை அவரவர்  வணங்குங்கள் .பிறரை சாடாதீர்கள் .சாதி மத சண்டை வேண்டாம். அன்பு செலுத்துவோம் .

இரண்டு நண்பர்கள் காட்டுக்கு சென்றார்கள் .ஒரு துறவி இருந்தார். அவர் சொன்னார் அங்கே போகாதீர்கள் உயிர்க்கொல்லி என்றார் . நண்பர்கள் மீறி உள்ளே சென்றனர் .தங்க பொற்காசுகள் உள்ள பானை இருந்தது .பார்த்து மகிழ்ந்தனர் .ஒருவன் சொன்னான் இதை கொண்டு சென்றால் மற்றவர்கள்  பிடுங்கி விடுவார்கள் .நான் இதை பார்த்து கொள்கிறேன் . பசிக்கிறது நீ  போய் சாப்பிட்டு விட்டு எனக்கு சாப்பிட வாங்கி வா பிறகு திட்டமிட்டு எடுத்து செல்வோம் .என்றான் .மற்றவன் சென்று சாப்பிட்டு விட்டு நண்பன் சாப்பாட்டில் விசம் கலந்து கொண்டு வந்தான்  .கொண்டு வந்து வைக்க குனியும்போது மறைத்து வைத்து இருந்த தடியால் அடித்தான் .அவன் இறந்தான் .கொன்று விட்டு நஞ்சு கலந்த உணவை உண்டு மற்றவனும்  இறந்தான் .ஆம் பணம் ,பொன் இவையெல்லாம் உயிர்க்கொல்லிதான் .அதிகம் ஆசை வைக்காதீர்கள்.  உண்மையாக நேர்மையாக மனசாட்சிப்படி வாழுங்கள் .மகிழ்ச்சியாக வாழலாம் . 



.

கருத்துகள்